அந்த பையன் மிகப்பெரிய “சூப்பர் ஸ்டாராக” வருவான்.. வெற்றிமாறனிடம் சொன்ன தனுஷ்.! வெளியே கசிந்த சீக்ரெட்.

vetrimaran-
vetrimaran-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாறன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்ததால் அதனை மாற்றி அமைக்க சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்துள்ளார். அந்த வகையில் தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.

இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுவதால் வெற்றியை மீண்டும் அடைவார் என தெரிய வருகிறது. சினிமா உலகில் தான் மட்டும் வெற்றியை கண்டால் போதாது தான் கூட இருப்பவர்களும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர் தான் தனுஷ். அந்த வகையில் தனுஷ் அனிருத், சிவகார்த்திகேயன் போன்ற பல சினிமா பிரபலங்களை வளர்த்து விட்டவர்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுக்காக பார்த்து பார்த்து செய்துள்ளார். மூன்று படத்தில் காமெடியனாக வாய்ப்பு கொடுத்தார் அதன் பின் எதிர்நீச்சல் போன்ற ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் இது இல்லாமல் அவருக்காக ரொம்பவும் மெனக்கட்டு இருக்கிறார். தனுஷ் சொல்லி உள்ளதை அண்மையில் இயக்குனர் வெற்றிமாறனிடம் வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

அதாவது சிவகார்த்திகேயனிடம் திறமை இருக்கிறது அவருக்கு  காமெடி கலந்த கதைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என தனுஷ் வெற்றி மாறனிடம்  கேட்டுக்கொண்டாராம். ஆனால் வெற்றிமாறனிடம் அது போன்ற கதைகள் இல்லாததால் உங்கள் உதவி இயக்குனர்கள் யாரிடமாவது இது போன்ற கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என தனுஷ் கேட்டாராம்.

மேலும் வெற்றி மாறனிடம் தனுஷ் சொல்லி உள்ளது. சிவகார்த்திகேயனிடம் திறமை அதிகமாக இருக்கிறது அவன் சூப்பர் ஸ்டாராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லி உள்ளார் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.