ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் அஜித் படம் இதுவரைக்கும் செய்யாத ஒரு புதிய சாதனையும் படைத்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் இந்தியாவில் மட்டுமே கோடிகளில் வசூலை அள்ளிய அஜித் தற்போது வெளிநாடுகளிலும் பல கோடிகளை அள்ளி வருகிறார் அந்த வகையில் வெளிநாட்டில் உள்ள தமிழர்களால் கூட துணிவு திரைப்படம் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனத்திற்கு செம்ம கலெக்சன் தான் என்றும் கூறி வருகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்திற்காக வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் மிக பிரமாண்டமாக பிரமோஷன் செய்தது என்பது குறிப்பிடத்து. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது அதாவது இதுவரைக்கும் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, உள்ளிட்ட பல பகுதிகளில் வசூலில் நாளுக்கு நாள் பட்டைய கிளம்பி வரும் துணிவு தற்போது வெளிநாடுகளிலும் வசூலை வாரி வருகிறது.
அந்த வகையில் துணிவு திரைப்படம் வட அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ள நிலையில் இதுவரைக்கும் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இதுவரைக்கும் அஜித் படம் வெளிநாடுகளில் பெரிய அளவிற்கு பேசப்படவில்லை ஆனால் துணிவு திரைப்படம் ஒரு மில்லியன் டாலர் என்ற வசூலை எட்டியது மட்டும் இல்லாமல் அஜித் படத்திற்கு ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறது இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரைக்கும் இந்தியாவில் மட்டுமே அதிக வசூலை தட்டி தூக்கிய அஜித் திரைப்படம் முதல் முறையாக வெளிநாடுகளில் பெரிய அளவில் வசூலை வாரியதால் இனி வரும் அஜித் திரைப்படங்கள் வெளிநாடுகளில் அதிக விலை போகும் என கூறப்படுகிறது.