என்னை அவருடன் சேர்த்து வைத்து பேசியதற்கு ரொம்ப நன்றி.! நீங்கள் சொல்வது உண்மைதான் – ராஷ்மிகா மந்தனா பதில்.!

rashmika-manthana
rashmika-manthana

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரு புதிய படம் பண்ணி வருகிறார் இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் காரணமாக ராஷ்மிகா மந்தனாவின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது இதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் உயர்த்தி வாங்குகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ராஷ்மிகா மந்தனா அண்மையில் டைகர் ஷெரிப் என்கின்ற பாலிவுட் நடிகருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார் என பலரும் கூறி வந்தனர் ஆனால் அது உண்மையான தகவல் இல்லை இருந்தும் அந்த செய்தி தீயாய் பரவியது. இந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா ஒரு பதிவை போட்டுள்ளார்

அதில் அவர் சொன்னது நீங்கள் சொன்னது போலவே தற்பொழுது நடந்துள்ளது அது உண்மைதான் என கூறியுள்ளார். டைகர் ஷெரிப்பும் நானும் இணைய உள்ளோம் அது உண்மை. படத்தில் அல்ல நானும் அவரும் ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளோம் என உறுதிப்படுத்தி உள்ளார்

ராஷ்மிகா மந்தனா அவருடன் இணைய உள்ளதால் தற்போது செம உற்சாகத்தில் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். நடிகை ராஸ்மிகா மந்தாவுக்கு தற்போது வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது. பாலிவுட்டில்  விளம்பரத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா அடுத்தது பாலிவுட் படத்திலேயே நடிப்பார் என அவரது ரசிகர்கள் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர்.