தனி ஒருவன் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? ஆனா இவர் அதுக்கு ஒத்து வர மாட்டாரே

arawind-swamy
arawind-swamy

Thanioruvan movie villan actor first choice : 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய  திரைப்படம் தனி ஒருவன் இந்த திரைப்படத்தில் நயன்தாரா அரவிந்த்சாமி வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில், நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் மோகன் ராஜா அவருக்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது.

அதேபோல் ஜெயம் ரவி திரைவாழ்க்கையில் மிக முக்கிய படமாகவும் அமைந்தது, படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார், இன்னும் தனி ஒருவன் திரைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மேலும் தனி ஒருவன் திரைப்படம் 10 நாட்களில் உலகம் முழுவதும் 51.08 கோடி வசூல் செய்தது. அதேபோல் முதல்வாரத்தில் 1.28 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம், அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் சென்னையில் மட்டும் 1.06 கோடி வசூல் செய்தது. தனி ஒருவன் திரைப்படம் பதினெட்டாவது நாள் முடிவில் மொத்தமாக இந்த திரைப்படம் 74.86 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படி விமர்சனத்தையும் வசூலிலும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக அமைந்தது அரவிந்த்சாமி கதாபாத்திரம்தான், தனி ஒருவன் திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தான் அரவிந்த்சாமி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் அரவிந்த்சாமிக்கு கிடைத்தது.

இந்த மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் ஆணழகன் மாதவன் தான், முதலில் மோகன் ராஜா மாதவனை தான் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது வில்லனாக நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை மாதவன் அதனால் அந்த கதாபாத்திரத்தை தவறவிட்டு விட்டாராம்.

அதன்பிறகுதான் அரவிந்த் சாமிக்கு அந்த வாய்ப்பு போனது, மாதவனுக்கு அப்பொழுது தெரியாது ஜெயம்ரவி கதாபாத்திரத்தை விட அரவிந்த்சாமி கதாபாத்திரம் மிகப் பெரியது என்று, ஆனால் படத்தை பார்த்துவிட்டு மாதவன் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தவறவிட்டு விட்டோமே என வருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.