எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சொப்பன சுந்தரி இந்த திரைப்படத்தில் லட்சுமி பிரியா, சந்திர மௌலி, தீபா, ஷங்கர், கருணாகரன் என பலர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது இதில் இயக்குனர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக பட குழுவினருடன் கலந்து கொண்டார்.
அதில் மோகன் ராஜா தனி ஒருவன் 2 திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இந்த திரைப்படத்தின் இயக்குனர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி வேலைக்காரன் படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு எப்பொழுதும் அதிகமாக இருக்கும் அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவர் இயக்குனராக உயர்ந்திருப்பது எனக்கு மிகவும் பெருமை இந்த திரைப்படம் தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை போல் இந்த திரைப்படம் லாக்கப்பை விட நன்றாக வந்திருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தின் சில காட்சிகளையும் முன்னோட்டியத்தையும் பார்த்துள்ளேன். அது இந்த திரைப்படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது மேலும் சொப்பன சுந்தரி என்றவுடன் நமக்கு அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரகாட்டக்காரன் காமெடி தான்.
ஆனால் இந்த திரைப்படம் வெளியிட்டதுக்கு பிறகு நம் நினைவுக்கு வருவது இந்த திரைப்படம் தான். அண்மை காலமாக தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு என்ற நினைப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது அது தவறு விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் படத்தை பார்த்துவிட்டு அது நல்ல படமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அனைவரும் திரையரங்கம் வந்து படத்தை பார்க்க வேண்டும் சமீப காலமாக மினிமம் கேரண்டி திரைப்படம் நடுத்தரமான திரைப்படம் என்று ஒரு சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது நன்றாக ஹிட் அடித்த திரைப்படம் அட்டர்ஃப்ளாக் திரைப்படம் என்றுதான் கூறுகிறார்கள் ஆவரேஜ் மினிமம் கேரண்டி திரைப்படம் ஒன்று இருக்கிறது அதை இப்பொழுது மறைந்து விட்டது அந்த நிலை மீண்டும் உருவாக்க வேண்டும்.
மேலும் தனி ஒருவன் திரைப்படம் இந்த வருடத்தில் இல்லை ஆனால் அடுத்த வருடம் கண்டிப்பாக வரும் என உறுதியோடு மோகன் ராஜா கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.