2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய திரைப்படம் தனி ஒருவன் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள், படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.
படத்திற்கு இசை மிகவும் பொருத்தமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் படத்தில் அரவிந்த்சாமி தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றார், அதேபோல் ஜெயம் ரவிக்கு சினிமா திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை வினியோகம் செய்தது, இந்த திரைப்படம் ஜெயம் ரவியின் வரலாற்றிலேயே 75 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படமாக பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அரவிந்த்சாமி நடித்த வில்லன் கதாபாத்திரம் தான்.
இந்த நிலையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக மோகன்ராஜா சமீபத்தில் அறிவித்திருந்தார் அது ஜெயம்ரவியின் 25வது படமாக இருக்கும் எனவும் கூறினார்கள், ஆனால் கதையை எழுத நேரம் எடுத்துக் கொண்டதால் ஜெயம்ரவியின் 25-வது திரைப்படமாக பண்ண முடியவில்லை அதனால் அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் தனி ஒருவன் இரண்டாம் பாகமாக தான் இருக்கும்.
அதேபோல் இந்த தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்தார் ஆனால் இரண்டாவது பாகத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது ஏனென்றால் தற்போதும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் நடித்த அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தை விட இரண்டாவது பாகத்தில் வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருப்பதாலும் கேரளாவில் ஜெயம் ரவியின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காக மம்முட்டியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
என்னதான் இருந்தாலும் அரவிந்த்சாமி வில்லனாக நடித்தால் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் அவருக்கு மாற்று நடிகர் என்றால் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய நடிகர் என்பதால் என்ன நடக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.