நடிப்பு அரக்கனை உள்ளே இழுத்து போடும் தனி ஒருவன் 2.? ஜெயம் ரவி தாக்குபிடிப்பாரா

Thani oruvan 2
Thani oruvan 2

Thani oruvan 2 main villan : சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடித்து விட்டால் பார்ட் 2 திரைப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இயக்குனர்களும் தற்போது பார்ட் 2 படத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியன் 2, சந்திரமுகி 2 ஆகியவற்றை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 உருவாக இருக்கிறது.

இதற்கான அறிவிப்பை அண்மையில் படக்குழு அதிரடியாக அறிவித்தது. தனி ஒருவன் முதல் பாகத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி ராமையா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் ரசிகைகள் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் படம் சென்று அடைந்தது.

அதனால் அதிக நாட்கள் ஓடியோடு மட்டுமல்லாமல் வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடியது. ஒட்டு மொத்தமாக 50 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. முதல் பாகம் ஹிட் அடிக்க ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி முக்கியமாக காரணமாக  இருந்தனர் ஆனால் அந்த படத்தில் அரவிந்த்சாமி இறந்து விடுவார்.

அதனால் பார்ட் 2  வில் யார் வில்லன் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தனி ஒருவன் இரண்டாவது பாகத்தில் இவர்தான் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அந்த நடிகர் வேறு யாரும் அல்ல மலையாள நடிகர் பகத் பாசில் தான்.

இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வருகின்றன அந்த வகையில் தனி ஒருவன் 2 படத்தில் இவர் இணைந்தால் படம் மிகப்பெரிய வெற்றி என பலரும் கூறி வருகின்றனர். இவரை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..