Thani oruvan 2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் ஜெயம் ரவி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருப்பார்.
வில்லனாக அரவிந்த்சாமி இவர்கள் இருவரும் வரும் காட்சி ஒவ்வொன்றும் மிரட்டலாகவும் இருக்கும், தம்பி ராமையாவின் வித்தியாசமான நடிப்பு பலரையும் சிரிக்க வைக்கும், நயன்தாராவின் காதல் மற்றும் ரொமான்டிக் சீனவும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கின. மொத்தத்தில் படம் சிறப்பாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடி 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தை தொடர்ந்து தனி ஒருவன் 2 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மோகன் ராஜா பிறமொழி பக்கம் தாவியதால் படம் பண்ணாமல் போனது. ஆனால் ரசிகர்கள் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவை பார்த்தாலே கேட்கும் முதல் கேள்வி தனி ஒருவன் 2 எப்பொழுது என்றுதான். இதற்கு சமீபத்தில் மோகன் ராஜா மன்றம் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 உருவாகுவது உறுதியென கூறினார்.
இதனால் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் தற்போது அதிகமாக பரவி வருகின்றன. படத்தில் ஜெயம் ரவி ஹீரோ, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயின், வில்லனாக நடிக்க பிரபல டாப் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது படக்குழு. அந்த நடிகர் வேறு யாருமல்ல..
மோகன் ராஜாவின் வேலைக்காரன், புஷ்பா, மாமன்னன் போன்ற படங்களில் நடித்த “பகத் பாஸில்” தான் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க போவதாக கூறப்படுகிறது. இவர் சேரும் பட்சத்தில் நிச்சயம் தனி ஒருவன் 2 மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறுவது உறுதி எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.