Azhagi Movie : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் தங்கர் பச்சான். முதலில் அழகிய என்னும் படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகம் கண்டார் முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கிய தங்கர் பச்சான் பள்ளிக்கூடம், அம்மாவின் கைபேசி..
மற்றும் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார் இப்படி ஓடிக் கொண்டு இருக்கிறார். தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா உலகில் தான் பார்த்த விஷயங்களை பதிவு செய்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. தான் இயக்கிய முதல் படமான அழகி படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அஜித்தின் ரெட் படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
இதனால் அழகி படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை தயாரிப்பாளரும் போனால் போகட்டும் என கூறி தான் சொந்த செலவில் படத்தை ரிலீஸ் செய்தார். அழகி படம் வெளியானதை அடித்து தங்கர் பச்சான் தன் மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்று பார்த்து உள்ளார்.
அந்த தியேட்டரில் வெறும் 5,6 பேர் மட்டுமே படத்தை சேர்ந்து பார்த்துள்ளனர் ஆனால் படம் முடிந்து வெளியே போகும்பொழுது அவர்கள் அழுதனர் அப்பொழுது படம் திருப்தியாக இருக்கிறது என நான் புரிந்து கொண்டேன் முதல் 10 நாட்களுக்கு அழகி படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை மொத்த கூட்டமும் அஜித் படத்தை பார்க்க போனது.
ஆனால் 10 நாட்களுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது அழகு படத்திற்கு நாட்கள் போகப்போக வரவேற்பு கடைக்க ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் 150 ஸ்கிரீன்களுக்கு மேல் அழகி படம் நல்ல விமர்சனத்தை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது என தங்கர் பச்சான் பேட்டியில் கூறியுள்ளார்.