இயக்குனர் பா. ரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்தார். அதை தொடர்ந்து கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து “தங்கலான்” என்ற படத்தை எடுத்து வருகிறார். கே ஜி எஃப் படத்திற்கு பிறகு தங்கத்தை..
பற்றி இந்த படம் பேச இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இன்னும் கூடுதலாக அதிகரிக்க இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரம் கமிட்டாகி உள்ளார். நடிப்பிற்கு பெயர் போனவர்களில் ஒருவர் விக்ரம் இவர் தனது படங்களுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமாலும் எடுப்பார்.
அதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். ஏன் கடைசியாக கூட வெளிவந்த கோப்ரா திரைப்படத்திலும் ரொம்ப மெனக்கட்டு பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை தற்பொழுது தங்கலான் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து வருகிறாராம் ஆம் மேக்கப் போடவே ரொம்ப நேரம் ஆகும் என சொல்லப்படுகிறது.
அப்படி போட்டு தான் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அனைவருக்குமே நல்ல கதாபாத்திரம் இருக்கிறதாம் அதனால் ஒவ்வொருவரும் ரொம்ப மெனக்கெட்டு வருகின்றனர் குறிப்பாக விக்கிரமை தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக நடித்து வரும்..
மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்கள் இவருடைய கதாபாத்திரங்களும் பெரிய அளவில் சொல்லப்பபடும் என கூறுகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பதற்காக நடிகை மாளவிகா மோகன் சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கினார் அப்பொழுது எடுக்கப்பட்ட நடிகை மாளவிகா மோகனின் கியூட் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.