தங்கலான் vs டிமான்டி காலனி 2.? யார் யாரிடம் மோதுறது.. இதோ முழு வசூல் விவரம்..

பண்டிகை நாட்கள் என்றாலே புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்வார்கள் அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி இதில் தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் அவர்கள் இயக்கியிருந்தார்.

அதேபோல் டிமான்டி காலனி 2 திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். விக்ரமின் தங்களான் திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

அந்த வகையில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய தங்கலான் திரைப்படம் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது அதன்படி உலக அளவில் 67 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அப்படி இருக்க அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி இரண்டாவது பாகத்தில் ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் என முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் அதேபோல் இந்த திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த வகையில் டிமான்டி காலனி 2 இதுவரை உலக அளவில் 34.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.