காட்டுவாசி ராணியை போல் மிரட்டும் மாளவிகா மோகனன்.! பிறந்த நாளில் வெளியானது ‛தங்கலான்’ போஸ்டர்.!

Thangalaan Malavika Mohanan
Thangalaan Malavika Mohanan

Thangalaan : பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‛தங்கலான்’ இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது. அதேபோல் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே இந்த திரைப்படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

‛தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து டேனியல், Parvathy Thiruvothu, மாளவிகா மோகனன், பசுபதி, ப்ரீத்தா கரன், ஹரி கிருஷ்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தும் விதமாக படக்குழுவினர் மாளவிகா மோகனன் நடித்துள்ள ‛தங்கலான்’ திரைப்படத்தில் காட்டு வாசி ராணி போல் தன்னுடைய கதாபாத்திரத்தின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்கள்.

அது மட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் ஆக சக்தி வாய்ந்த பெண், வலிமை, திறமை, அதிகாரம் நிறைந்த ஒரு பெண்மணிக்கு ஹாப்பி பர்த்டே என பதிவிட்டுள்ளார்கள். மேலும் இது குறித்து மாளவிகா மோகன் இதுவரை இல்லாத வகையில் தங்களான் திரைப்படத்தில் தன்னுடைய உடல் மனம் மற்றும் உணர்ச்சி சகிப்புத்தன்மை என அனைத்தையும் சோதித்துள்ளதாகவும் படத்திற்காக ரத்தம் வியர்வை சிந்தியதாகவும் கண்ணீரை வாரி இறைத்ததாகவும் பகிர்ந்துள்ளார்கள் அவர் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிலம்பாட்டம் பயிற்சி, குதிரை சவாரி பயிற்சி கற்றுக் கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் Daniel Caltagirone என்ற ஹாலிவுட் நடிகரும் இணைந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க தொழிற்சாலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.