thangaikkor geetham : தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை பாசத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் தங்கை பாசத்தை வைத்து வெலியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற்று தான் வருகின்றன. தங்கை பாசம் என்ற சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான்.
சிவாஜி கணேசனுக்கு பிறகு அடுத்ததாக பேசப்படும் நடிகர் டி ராஜேந்திரன் இவர் தங்கைக்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது தங்கைக்கோர் கீதம் திரைப்படம் தான். இந்தத் திரைப்படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. படத்தை இயக்கியவர், வசனம், திரைக்கதை, இசை, பாடல் என அனைத்து வேலையையும் ஒற்றைய ஆளாக டி ராஜேந்திரன் இந்த திரைப்படத்தில் பார்த்துள்ளார்.
அதேபோல் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது இன்று வரை இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அதிலும் தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி என்ற பாடல் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை கொடுக்காதீர்கள் வரதட்சணை வாங்காதீர்கள் என்ற சமூக கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் தொடங்கப்பட்டது.
தங்கை பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது சென்டிமென்ட் கதை சொல்வதில் டி ராஜேந்திரன் வல்லவர் அதற்கு இந்த திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டு.
மேலும் இந்த திரைப்படத்தில் நளினி சரிதா என முக்கிய நடிகர்களை வைத்து நடிக்க வைத்து மாபெரும் ஹிட் கொடுத்தார், டி ராஜேந்திரன் படம் வெளியாகி இன்றுடன் 40 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த திரைப்படத்தை கொண்டாடும் விதமாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
40 வருடங்கள் கழித்தும் ஒரு திரைப்படம் பேசப்படுகிறது என்றால் அந்தப் பெருமை தங்கைக்கு ஒரு கீதம் திரைப்படத்திற்கு உண்டு என அனைவரும் நம்புவார்கள் ஏனென்றால் அந்த அளவு இந்த திரைப்படத்திற்காக டி ராஜேந்திரன் மெனக்கட்டுள்ளார்.