தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.. இவர்கள் இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின.. இதில் எந்த படம் வெற்றி பெறும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டு தொடர்ந்து ஓடியது தற்போது 100 நாட்களை இரண்டு திரைப்படங்களுமே கடந்து உள்ள நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் வசூல் எவ்வளவு என்பது குறித்து..
ஒரு தகவல் இணையதள பக்கத்தில் உலா வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படம் தமிழ்நாடு – 131 கோடி, ஓவர் சீஸ் – 65 கோடி, AP /TG – 4 கோடி மொத்தம் – 223 கோடி பிசினஸ் – 90 கோடி ஷேர் – 115 கோடி PROFIT – 25 கோடி..
வாரிசு தமிழ்நாடு – 141 கோடி, ஓவர் சீஸ் – 80 கோடி, கர்நாடகா – 15 கோடி, கேரளா – 13 கோடி, AP/ TG – 25 கோடி, நார்த் இந்தியா – 13 கோடி, மொத்தம் – 287 கோடி, பிசினஸ் -140 கோடி, ஷேர் – 147 கோடி, PROFIT – 7 கோடி. வசூல் ரீதியாக வாரிசு திரைப்படம் முதல் இடத்தை பிடித்தாலும் லாப கணக்கை பொறுத்தவரை துணிவு திரைப்படமே நம்பர் ஒன் இடத்தை தட்டி சென்று இருப்பதாக இணையதளத்தில் தகவல் வைரலாகி வருகிறது.
இது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்து உடன் கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் துணிவு படத்தின் வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என இப்பொழுது அஜித் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.