காயத்திலிருந்து மீண்ட நடிகர் விக்ரம்.? தங்கலான் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்..!

vikram
vikram

தமிழ் சினிமாவில்  நடிப்பிற்கு பெயர் போனவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.. இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் சமீபகாலமாக அவருடைய படங்கள் மக்கள் மத்தியில் கவனம் இற்கவில்லை..

இதை விக்ரமும் நன்கு உணர்ந்து கொண்டு தற்பொழுது சிறந்த இயக்குனர்களிடம் கைகோர்த்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் முதலாவதாக வெற்றியை இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைந்து  தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

படத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன், ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோ  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். தங்கலான் படத்தின்  படப்பிடிப்பு கடப்பா, குண்டூர் என பல இடங்களில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் படத்தின் ஷூட்டிங்கில் விக்ரம் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விக்ரமுக்கு பலத்த அடிபட்டது இதனால்  அவரை அழைத்துக் கொண்டு படக்குழு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தது.  மருத்துவர்கள் விக்ரம் ஓய்வெடுக்க வேண்டும் என கூறியது அடுத்து படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது தற்பொழுது விக்ரம் எப்படி இருக்கிறார் என்பது குறித்து பா. ரஞ்சித் பேசி உள்ளார்.

அதில் அவர் சொன்னது விக்ரம் தற்போது குணமடைந்து ஜாலியாக இருப்பதாகவும், தங்கலான் படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 12 நாள் மட்டுமே படப்பிடிப்பு இருவதாகவும் பா. ரஞ்சித் கூறியுள்ளார் இந்த அப்டேட்டை கண்ட ரசிகர்கள் வேற லெவல் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.