அர்ஜுனை பணம் கேட்டு மிரட்டும் அடியாட்கள்.! நன்றியை மறந்து பேசும் ராகினி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்

arjun
arjun

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோட்டில் அர்ஜுன் தன்னைதானே ஆள் வைத்து கத்தியால் குத்த சொன்னதை வைத்து அந்த ரவுடிகள் அர்ஜுனை மிரட்ட ஆரம்பித்து விடுகிறார்கள் பணம் தந்தால் விட்டு விடுகிறேன் என அர்ஜுனை மிரட்டுகிறார்கள். ரவுடிகள் அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருப்பதை கோதையின் கணவர் பார்த்து விடுகிறார். ஆனால் அந்த ரவுடிகளை அனைவரும் கூட படித்தவர்கள் என கூறி அர்ஜுன் கோதையின் கணவரிடம் மழுப்பி விடுகிறார் அர்ஜுன்.

அடுத்த காட்சியில் தமிழ் கம்பெனியில் வேலை செய்ய ஆள் இல்லை என்பதால் நமச்சி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கோதையின் கம்பெனியிலிருந்து சில நபர்கள் வேலை கேட்டு வந்துள்ளார்கள் ஆனால் தமிழ் முதலில் வேண்டாம் என மறுத்து விடுகிறார்கள். பிறகு தமிழ் அவர்களையும் வேலைக்கு சேர்த்துக்கலாம் என கூறி விடுகிறார். அர்ஜுன் கம்பெனியில் இருந்து  சில நபர்கள் வேலைக்கு சென்றதால் அது கோதைக்கு தெரிய வர திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நம்ப கம்பெனியை டெவலப் பண்ணுவாங்கன்னு பார்த்தா அடுத்தவங்க கம்பெனி அழிக்க நினைக்கிறீங்க அந்த கம்பெனியை அழிக்கிறதா நினைச்சு நம்ம கம்பெனியை அழிச்சுக்கிட்டு இருக்கீங்க உங்களுக்குன்னு ஒரு பொறுப்பை கொடுத்தா அதை கூட உங்களால் சரியா செய்ய முடியாத. கார்த்தி தான் பொறுப்பில்லாமல் நடந்துக்கிறான்னு பார்த்தா நீங்களும் அப்படித்தான் நடந்துக்கிறீங்க குறுக்கு வழியில எப்படி முன்னேற முடியும் என அர்ஜுனனை பார்த்து கோதை தீட்டிக் கொண்டு இருக்க ராகினி டென்ஷனாகி எதுக்கெடுத்தாலும் ஏன் என்னோட வீட்டுக்காரர் மட்டும் திட்றீங்க.

அவரு முடிவு எடுக்கிற பொறுப்புல இல்லையே கார்த்தி தான் எல்லாத்துக்கும் காரணம் அர்ஜுன் வந்த பிறகு தான் மூன்று யூனிட் 500 ஒர்க்கர்ஸ் நம்ம கம்பெனில இருக்காங்க எல்லாத்துக்கும் காரணம் அர்ஜுன் தான் என கூற அதற்கு வசு இது முழுக்க காரணம் தமிழ் மாமாவும் கார்த்தியும் தான் அர்ஜுன் வந்த பிறகு தான் இவ்வளவு பிராப்ளம் இருக்கிறது என வசு கூறிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ராகினி எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என தனது அம்மாவை பார்த்து கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் கம்பெனி பொறுப்பை கொடுப்பதற்கு முழு தகுதியும் அர்ஜுனுக்கு இருந்துச்சு ஆனால் நீங்க அண்ணன் கிட்ட தான் பொறுப்பை கொடுத்தீங்க என ராகினி கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் ராகினி நாங்கள் இந்த வீட்டிலேயே இருக்க மாட்டோம் போயிடுறேன் எனக் கூற கோதை எல்லாரும் போங்க  தப்பை தட்டி கேட்டா மிரட்டரியா என கோதை கத்துகிறார் அதனால் நெஞ்சு வலி வருகிறது,.

நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து விடுகிறார் இதனால் ராகினி தமிழிடம் சென்று அம்மா நெஞ்சு வலிக்கு நீ தான் காரணம் அர்ஜுன் அங்க இருக்க விடாம செய்ற அதுமட்டுமில்லாமல் அர்ஜுன கொலை பண்ண பார்த்த நீ, நானும் அம்மா கூட கொஞ்சம் ஆர்குவ்மென்ட் பண்ணுனேன் அதனாலதான் அம்மாவுக்கு இப்படி ஆச்சுன்னு சொல்றாங்க ஆனா நெஜம் உன்னால தான் அம்மாவுக்கு இப்படி ஆச்சு கொஞ்சமாவது அம்மா மேல பாசம் இருக்கா என ராகினி தமிழை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.