ராகினிடம் கோதை மற்றும் நடேசனை போட்டுக் கொடுத்த அர்ஜுன்.! லவ்வா லவானு கத்தும் ராகினி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

thamizhum saraswathiyum august 23
thamizhum saraswathiyum august 23

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் கோதை  கம்பெனியில் யாரும் தப்பு பண்ணவில்லை கம்பெனியில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் அது இப்ப முளைச்சி வரும் செடி அதை அடியோடு தான் வெட்டி வீசணும் அதுக்கான நேரம் வரும் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் விஷ செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டதாகவும் கூறுகிறார் உடனே அர்ஜுன் பார்த்த அத்தை கேர்புல்லா ஹாண்டில் பண்ணுங்க விஷச்செடி கையால புடிச்சிட்டீங்கன்னா முள்ளு குத்திடும் அதுக்கப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம் என நாட்களாக பேசுகிறார்.

அந்த காலத்திலேயே ஒரு பழமொழி சொல்லி வச்சிருக்காங்க பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று கண்டிப்பாக மாப்பிள்ளை மாட்டுவான் என நடேசன் கூற உடனே அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் ஒன்னும் இல்லம்மா மாப்பிள்ளை கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன் அந்த ரவுடி கண்டிப்பா மாட்டுவான் என்று எனக் கூறி மழுப்ப உடனே ராகினி நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு தெரியல குழப்பத்தில் இருக்கிறார்.

கோதை மற்றும் நடேசன் ரூமிற்கு செல்ல அப்பொழுது  தமிழ் மற்றும் சரஸ்வதி அர்ஜுன பத்தி நிரூபிக்க இப்படி தானே கஷ்டப்பட்டு இருப்பாங்க அதை நான் புரிஞ்சுக்காம போயிட்டோம் என வருத்தப்படுகிறார்கள். மற்றொரு பக்கம் ராகினி அர்ஜுனை கூப்பிட்டு  அம்மாவும் அப்பாவும் ரவுடியை பார்க்க போனாங்க அதேபோல்  நீங்களும் பிரெண்டா பார்க்கப் போனீங்க ஆனா ரெண்டு பேரும் ஒரே நம்பரை பத்தி பேசுற மாதிரி தெரியுது,  ஆமா ராகினி   என்னோட பிரண்டு குமார பாக்க நான் போனேன் அங்க போனா அத்தை மாமாவும் இருக்காங்க.

அவங்க என் பிரண்டு கிட்ட விசாரிச்சிட்டு இருந்தாங்க இளங்கோவ வச்சு சரஸ்வதி என் மேல பழி போட பார்த்தாங்க இப்ப என் நண்பன வச்சு என் மேல பழி போட பார்க்கிறாங்க ஆனா என் நண்பன் அதுக்கு ஒத்துக்கல என ராகினிடம் கோதை மற்றும் நடேசன் போட்டு கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் இதற்கு உடந்தையாக இருப்பது அத்தையும் என்று நினைக்கிறேன் என பேச என்ன நினைச்சுட்டு இருக்காங்க எல்லாமே அந்த தமிழுக்கு தான் சப்போர்ட் பண்றாங்க என ராகினி கத்துகிறார் நான் போய் கேட்கிறேன் என கூறுகிறார்.

உடனே அர்ஜுன் அதெல்லாம் வேணாம் நீ என்னை முழுசா நம்புர இல்ல என கேட்க நம்புறேன் அர்ஜுன் எனக் கூறுகிறார் ராகினி அது போதும் எனக்கு என அர்ஜுன் பேசுகிறார். மற்றொரு பக்கம் சரஸ்வதி விரதம் எடுப்பதற்கு தமிழிடம் கூற தமிழ் அதெல்லாம் வேண்டாம் நம்ம ஆரோக்கியமா தானே இருக்கோம் அதனால கண்டிப்பா குழந்தை பிறக்கும் என பேசுகிறார். உடனே தமிழ் ஆபிசுக்கு கிளம்புகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுனை எப்படி கெட்டவன்னு நிரூபிப்பது என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க வசு அந்த  சமயத்தில் வந்து என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது என்னதான் தப்பு செஞ்சாலும் அந்த போன்ல ஏதாவது ஒரு ஏவிடென்ஸ் வச்சிருப்பான் அதை நாம் தூக்கினாலே போதும் அப்பதான் அவன் வாயாலேயே உண்மையை சொல்ல வைக்க முடியும் என பேச அதற்கு அடுத்தவங்க போனை நாம் எடுப்பது தப்பு என கோதை கூற அர்ஜுன் வழியிலேயே போனால்தான் அவனை மடக்கி புடிக்க முடியும் என கூறுகிறார்கள்.

உடனே அனைவரும் சாப்பிட உட்கார்கிறார்கள் அப்பொழுது போனை எடுப்பதற்கு வசு பிளான் பண்ணுகிறார். கோதை மற்றும் நடேசனுக்கு வசு பரிமாற ராகினி அவங்களே பரிமாறட்டும் எனக் கூற எதுக்கு அதெல்லாம் வேண்டாம் அப்புறம் அவங்களை வேலை வாங்குறோம் என சொல்லுவ நீ என பதிலடி கொடுக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது போனை அடுத்த காட்சியில் வசு எடுத்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.