தூண்டிலில் மாட்டிய மீனை போல் கோதையிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.! நேர்மை என்றால் அது தமிழ் தான்.. உமாபதி எடுத்த அதிரடி முடிவு..

thamizhum-saraswatiyum-may-16
thamizhum-saraswatiyum-may-16

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க வேலை செய்யும் ஊழியர் வீட்டிற்கு சரஸ்வதியும் நமச்சிம் சென்றுள்ளார்கள். அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது ஏனென்றால் ஸ்கூல் பீஸ் கட்டவே பணம் இல்லை என்று கூறியவர் வீட்டில் புது பைக், புது டிவி, புது வாஷிங் மெஷின், புது பிரிட்ஜ் என அனைத்து பொருட்களும் இருக்கிறது இதனால் அவருடைய மனைவியிடம் சரஸ்வதி விசாரிக்கிறார். ஆனால் திருடிய நபரின் குழந்தை இதை எல்லாம் நேற்று தான் வாங்கியது என உண்மையை கூறிவிட்டது.

நாசுக்காக அவர்கள் பேசுவதை வீடியோவாக பதிவு செய்து விட்டார் நமச்சி  பின்பு கம்பெனிக்கு வந்து திருடியது இவர்தான் என சரஸ்வதி கூற உடனே தமிழ் அவரை அழைத்து வந்து அறைந்து கேள்வி கேட்கிறார் அவர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை பின்பு வீடியோவை போட்டு காட்டியதற்கு பிறகு அர்ஜுனும் கார்த்தியும் தான் இதையெல்லாம் செய்ய சொன்னது என ஒப்புக் கொள்கிறார்கள். இதனால் சக ஊழியர்கள் அவரை அடித்து துவம்சம் செய்கிறார்கள் பிறகு தமிழ் அடிக்க வேண்டாம் இதை எங்க நிரூபிக்கணுமோ அங்க நிரூபித்து அதுக்கப்புறம் பேசிக்கலாம் என அழைத்துக் கொண்டு உமாபதி இடம் செல்கிறார்.

முதலில் உமாபதி தமிழை பார்க்க மறுக்கிறார் பின்பு தமிழ் எவ்வளவோ கெஞ்சி அவரை சம்மதிக்க வைக்கிறார் பிறகு நடந்த அனைத்து உண்மைகளையும் திருடிய நபர் தன்னுடைய வாயாலயே ஒப்புக்கொள்கிறார் இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி என்னுடைய மெட்டீரியலையே திருடுரான்களா இவ்ளோ கீழ் தரமா  இருக்காங்களா அர்ஜுனா இவ்வளவு கீழ்த்தரமான வேலையை பார்த்தது என உமாபதி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு உமாபதி கிளம்பி கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு போகிறார்கள் அங்கு கார்த்தி, அர்ஜுன், கோதை, கார்த்தியின் அப்பா என அனைவரும் கம்பெனி பற்றி டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் உமாபதி அங்கே வருகிறார் கோதையை பார்க்க வேண்டும் என கூறுகிறார் அவரை வெளியே வர சொல்கிறார் அப்பொழுது கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழ் நான் ஒன்னும் உறவு கொண்டாட வரல உண்மையை சொல்ல வந்திருக்கேன் என அர்ஜுனை பார்த்து மிரட்டுகிறார்.

கோதை தேவை இல்லாம இங்க வந்து சத்தம் போடக்கூடாது என கூற அனைவரையும் வெளியே அனுப்புங்கள் என சொல்கிறார் உடனே அர்ஜுன் தமிழை வெளியே அனுப்ப சொல்லும் பொழுது தமிழ் எதிர்த்து கொண்டு கிட்ட வந்த கழுத்த திருப்பிவிடுவேன் என மிரட்டுகிறார். அதன் பிறகு கம்பெனியிலிருந்து 500 பீசை திருட சொன்னதை உமாபதி கூறுகிறார் அப்பொழுது கோதை அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் கோதை அர்ஜுனிடம் கேட்க இல்லை அத்தை என மழுப்புகிறார்.

ஆனால் நமசசி  எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு என திருடியவர் வாயாலேயே உண்மையை கூற வைக்கிறார் இதனால் அதிர்ச்சி அடைந்த கோதை இவ்வளவு நாள் நான் நேர்மையா நடந்துக்கிட்டேன். எனக்கு இப்படி ஒரு பெயரை நீங்க ரெண்டு பேரும் தேடி கொடுத்திருக்கீங்க என கூறிவிட்டு உமாபதி சாரிடம் மன்னிப்பு கேட்கிறார் கோதை.

அது மட்டும் இல்லாமல் உமாபதி சார் இன்னும் கோபமாக இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது .