தமிழ் கம்பேனியிலேயே கருப்பு ஆட்டை உருவாக்க பார்த்து பல்ப் வாங்கிய அர்ஜுன் மற்றும் கார்த்திக்.! மீண்டும் மெக்கானிக் வேலைக்கு செல்வதால் சரஸ்வதிக்கு வந்த பிரச்சனை.! இன்றைய முழு எபிசோட்.

thamizhum-saraswatiyum-may-10
thamizhum-saraswatiyum-may-10

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி குழந்தையை தான் தூக்கியதால் தான் உடம்பு சரியில்லாமல் போனது என வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் வசு போன் செய்து நடந்த அனைத்தையும் வேலைக்கா பெண் கூறியதாகவும் நீ படிச்சிருக்க நீ ஏன் இப்படி நடந்துக்குற என வசு கேட்கிறார் ஆனாலும் சரஸ்வதி இனி என்கிட்ட குழந்தையை கொடுக்க வேண்டாம் என கூறி விடுகிறார்.

தமிழ் நீ தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காத நாம நல்ல மனசோட தான் இருக்கோம் அதனால நல்லது தான் நடக்கும் என கூறிவிட்டு கம்பெனிக்கு செல்கிறார் தமிழ். அதேபோல் சரஸ்வதியும் மெக்கானிக் செட்டிற்கு செல்கிறார். தமிழிடம் ஒரு தொழிலாளி ஒருவர் வந்து எனக்கு 30,000 அட்வான்ஸ் தேவை என கூறுகிறார் உடனே தமிழ் முப்பதாயிரம் எப்படின்னா என்னால இப்ப கொடுக்க முடியும் என சொல்லிவிடுகிறார்.

அதன்பிறகு நமச்சிவிடம்  நம்ப கம்பெனி தொழிலாளிக்கு நாம தான் செய்யணும் ஆனா நம்ம கிட்ட இப்ப பணமே இல்லையே என புலம்பி கொண்டிருக்கிறார். அதேபோல் அந்த தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் கேட்க பணம் இல்லை என்றதும் சரி வட்டிக்கு வாங்கிக் கொள்ளலாம் என கிளம்பி விடுகிறார். அடுத்த காட்சியில் மெக்கானிக் செட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சரஸ்வதி வீட்டிற்கு கிளம்ப பார்க்கிறார் அந்த நேரத்தில் இந்த வண்டியையும் முடித்துவிட்டு கிளம்புமா மீதியை நான் பார்த்துக்கிறேன் என ரெக்வஸ்ட் வைக்கிறார் ஓனர்.

வேறு வழி இல்லாமல் சரஸ்வதி அந்த வண்டியை முடித்துவிட்டு தான் வீட்டிற்கு கிளம்புகிறார் அந்த சமயத்தில் தமிழ் வீட்டிற்கு முன்பே வந்து ஆளை காணும் என தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் சரஸ்வதி கடையில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து தமிழிடம் கொடுக்க அதற்கு தமிழ் காட்டு கத்து கத்துகிறார் அதுமட்டுமில்லாமல் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உப்புமில்லை புலி ஓவராக இருக்கு என அப்படியே வைத்துவிட்டு கை கழுவி விட்டு சென்று விடுகிறார்.

இந்த சமயத்தில் கார்த்தி மற்றும் அர்ஜுன் தமிழ் கம்பெனியில் தொழிலாளிக்கு பணம் தேவை என்பதை புரிந்து கொண்டு அந்த தொழிலாளியை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள் ஆனால் அந்தத் தொழிலாளி தமிழுக்கு இப்படி ஒரு துரோகத்தை நான் செய்யவே மாட்டேன் கம்பெனி இந்த வேலை முடிஞ்சதும் எனக்கு அவரே பணம் தருவாரு என நன்றி விசுவாசத்தை காட்டி விடுகிறார்.

இதனால் கடுப்பான அர்ஜுன் மற்றும் கார்த்திக் கிளம்பி விடுகிறார்கள் அடுத்த காட்சியில் தமிழ் வரும்பொழுது சாப்பாடு எங்கே என அவரின் நண்பர் நமச்சி கேட்க சாப்பாடு இல்லை அவளே வெளியில வாங்கிட்டு வந்தா அதனால கத்தி விட்டேன் சண்டை போட்டேன் என தமிழ் கூறுகிறார் உடனே காசை கொடுத்து நீ வெளியில் சாப்பிட்டுவிட்டு வா என கூற அதற்கு சாப்பிட்டுவிட்டு போண்டாவையும் வாங்கி வருகிறார் அவர்.

அந்த சமயத்தில் சரஸ்வதி கால் செய்கிறார் ஆனால் தமிழ் போனை எடுக்க மறுக்க பிறகு நமச்சிக்கு கால் பண்ண பிறகு பேசுகிறார் இரவு என்ன சமைக்க வேண்டும் என கேட்க தமிழ் நீ சமைக்கவே வேணாம் நான் வந்த பிறகு சமைச்சா போதும் என கூறி விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.