தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி செய்து கொடுத்த பிரியாணியை மறைத்து நடேசன் மற்றும் வசுவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அர்ஜுனின் மாமா பிரியாணி வாசம் வருகிறது என மாடிக்கு வந்து விடுகிறார் அப்பொழுது நடேசன் மற்றும் வசு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதை பார்த்த நடேசன் பிரியாணி சாப்பிடுகிறீர்களா எங்கள மட்டும் கடையில் வாங்கி சாப்பிட கூடாதுன்னு சொல்றீங்க நீங்க சாப்பிடலாமா என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் நான் போய் கோதையிடம் சொல்லி விடுவேன் என கூற நடேசன் சொல்லு சொல்லு என கூறுகிறார். நான் சொல்ல கூடாதுன்னா எனக்கு கொஞ்சம் பிரியாணி தங்க என கேட்க பிரியாணி ஒரு பருக்ககூட கிடையாது என கூறி விடுகிறார். அதனால் அர்ஜுன் மாமா கோபப்பட்டு கீழே சென்று அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு வருகிறார். அந்த சமயத்தில் நடேசன் தக்காளி சாதத்தை எடுத்து வைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
அர்ஜுன் மாமா பிரியாணி சாப்பிடுகிறார்கள் என கூற அதற்கு நல்லா பாரு இது தக்காளி சாதம் என கூறுகிறார் இதனால் அர்ஜுன் மாமா அசிங்கப்பட்டு செல்கிறார். சரஸ்வதியை பார்ப்பதற்கு நடேசன் வருகிறார் அப்பொழுது தமிழ் கண்டிப்பா மாப்பிள்ளைய குத்தி இருக்க வாய்ப்பே இல்லை என்பது போல் கூறுகிறார்கள். அதேபோல் தமிழ் சொத்துக்கு ஆசைப்படவில்லை அவர் சொன்னது போல் நாங்கள் எங்கள் உழைப்பில் முன்னேறுவோம் என சரஸ்வதி கூறுகிறார்.
இதனால் நடேசன் அவருக்கு சந்தேகம் வருகிறது அதனால் ராகினிடம் விசாரிக்கிறார் அன்று என்ன நடந்தது என கேட்கிறார் ராகினியும் தமிழ் கத்தியால் குத்தினான் எனக் கூற அதற்கு நடேசன் தமிழ் கையில் கத்தி இருந்தத பார்த்தியா என கேட்க அர்ஜுன் வயிற்றிலிருந்து தமிழ் தான் கத்தியை பிடுங்கினான் என கூறுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அர்ஜுன் மறைந்திருந்து பார்க்கிறார் பின்பு ராகினியை விட்டால் ஏதாவது உளறி விடுவாள் என ராகினியை அழைத்துச் செல்கிறார்.
அடுத்த காட்சியில் வசு சரஸ்வதிக்கு போன் பண்ணுகிறார் அப்பொழுது கார்த்திக் என்னிடம் பேசுவதே இல்லை கார்த்தி அடுத்தவர்கள் கம்பெனியை இப்படி சீரழிக்கும் கேரக்டரே கிடையாது ஆனால் இதெல்லாம் செய்கிறான் என அதிர்ச்சி அடைந்து வசு கூறுகிறார் அதற்கு காரணம் அர்ஜுன் தான் என சரஸ்வதியும் கூறுகிறார் இதனை அர்ஜுனனின் அக்கா மறைந்திருந்து ஒட்டு கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.