Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுனின் மாமா ராகினியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்லும்பொழுது குடிபோதையில் வண்டி ஓட்டியதால் ஒரு இடத்தில் இடித்து நின்று விடுகிறார் இதனால் அந்த வழியாக வந்த தமிழ் ராகிணியை அழைத்து சென்று ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்.
அப்பொழுது தமிழ் அர்ஜுனுக்கு போன் செய்து ராகினிக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன உயிரோட விட மாட்டேன் என மிரட்ட பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார் அர்ஜுன், பிறகு நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டு தமிழிடம் மன்னிப்பு கேட்கிறார்.
அதேபோல் அர்ஜுனின் மாமா எதுவுமே தெரியாதது போல் பேச தமிழிடம் அடி வாங்குகிறார். இப்படியே போக ராகினிக்கு பெண் குழந்தை பிறக்கிறது அதனை அனைவரும் தூக்கி கொஞ்சி கொண்டாடுகிறார்கள் அதேபோல் ராகினி தான் செய்த தவறை உணர்ந்து தமிழிடம் மன்னிப்பு கேட்டு பாப்பாவை தூக்க மாட்டீங்களா என கேட்க நான் இப்பவே தூக்கி கொண்டு போகிறேன் என தமிழ் கூறுகிறார் எப்படி சந்தோஷத்தில் மிதக்குகிறார்கள் அனைவரும்.
இந்த நிலையில் புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் தமிழ் மற்றும் நமச்சி ஒரு கம்பெனிக்கு வருகிறார்கள் அப்பொழுது எதிர்பாராத விதமாக நமச்சி ஒரு லேடியை இடித்து விடுகிறார் ஆனால் அந்த லேடி நமச்சியை கைநீட்டி செவுளில் ஒரு அரை விடுகிறார்.
ஒரே ஒரு நூல் பிச்சுகிச்சுன்னா மொத்த மானமும் கப்பலேறிடும்.! வைரலாகும் தர்ஷா குப்தா புகைப்படம்
இதனை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அந்த லேடியை அறைந்து விடுகிறார். ஆனால் அவர்கள் பார்க்க வந்ததே அந்த லேடி தான் என பிறகு தான் தெரிகிறது ஆபீஸில் அனைவரும் உட்கார்ந்திருக்கும் பொழுது பரபரப்பாக இருக்கிறார்கள் அப்பொழுது அந்த லேடி உள்ளே வருகிறார்.
சிசிடிவி கேமராவை பார்த்த லேடி அவர்கள் இரண்டு பேரையும் உள்ளே வர சொல்லுங்கள் எனக் தமிழையும் நமச்சியையும் கூறுகிறார்கள். இத்துடன் ப்ரோமோ முடிகிறது மோனிகா தான் இனி வில்லியாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மிரட்டப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.