அர்ஜுன் வண்டவாளத்தை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கிய நடேசன்.! கண்களால் மிரட்டும் மாப்பிள்ளை.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum-saraswathiyum-20
thamizhum-saraswathiyum-20

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் கோதைக்கு நெஞ்சுவலி வந்ததால் தமிழ் அதற்காக கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்கிறார். தமிழ் இவ்வாறு வேண்டிக் கொள்வதால் அதை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் நடேசன் கூறுகிறார். அதனால் தமிழ் மீது கொஞ்சம் அனுதாபம் ஏற்படுகிறது ஆனாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் கோதை அவன் மாப்பிள்ளையை கொல்லப் பார்த்தான் என கூறி கோபப்படுகிறார்.

அதே போல் தன்னைத்தானே ஆள் வச்சி குத்துவது போல் நடித்து தமிழை சிக்க வைத்த அர்ஜுன் செட் பண்ணிய ரவுடிகள் தற்பொழுது அர்ஜுனை மிரட்டி பணம் கேட்கிறார்கள் இதனை நடேசன் பார்த்து விடுகிறார் அதனால் சிறிது சந்தேகம் வருகிறது.

அதே போல் நடேசன் ஒவ்வொரு நாளும் தமிழ் கண்டிப்பாக தப்பு செய்யவில்லை என்பதை எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கிறார் ஆனால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் நம்புவது போல் தெரியவில்லை வசுவும் நடேசனும் தமிழ் தப்பு பண்ண வாய்ப்பே இல்லை என உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திடீரென ஒரு ப்ரோம்மா வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் நடேசன் தன்னுடைய மகள் ராகினியிடம் விசாரிக்கிறார். அர்ஜுனை தமிழ் குத்தியதை நீ பார்த்தியா அப்பொழுது தமிழ் கையில் கத்தி இருந்ததை நீ பார்த்தியா என விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ராகினி தமிழ் அர்ஜுன் வயிற்றிலிருந்து கத்தியை பிடுங்கும் பொழுது நான் பார்த்தேன் என  கூறுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் வெளியே வருகிறார் இவர் விசாரித்துக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார் அதனால் அர்ஜுன் பயந்து போய் ராகினிடம் வந்து மாமா இந்த மாதிரி நேரத்துல இவ்வள இன்னும் கேள்வி கேட்டு ஏதாவது ஆகிட போகுது என ராகினி அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார் அர்ஜுன்.

ராகிணியை அழைத்துக்கொண்டு செல்லும் பொழுது நடேசன் திரும்பி பார்க்கிறார் அதனால் நடேசனுக்கு சிறிது சந்தேகம் ஏற்படுகிறது.