ஒட்டு எண்ணிக்கை வெளியானது.. பட்டாசு வெடிக்க ரெடியான அர்ஜுன்.! கடைசி நிமிடம் வரை திக் திக் திக்.! தமிழும் சரஸ்வதியும் புரோமோ வீடியோ..

thamizhum-saraswathiyum-june-21-to-23
thamizhum-saraswathiyum-june-21-to-23

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழுக்கு எதிராக மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் வைத்து அர்ஜுன் பக்காவாக பிளான் செய்து அனைத்து முதலாளிகளுக்கும் போன் செய்து அசோசியேஷன் பணத்தில் உங்களுக்கு நல்லது செய்வதாக கூறியதாகவும் உங்களுக்கு பெரிய பெரிய ஆர்டர் எடுத்து தருவதாகவும் பேசி தமிழ் மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டு செய்கிறார்.

இதனால் ஒட்டுமொத்த முதலாளியும் அசோசியேஷன் ஆபீஸ்க்கு வந்து அனைவரும் திட்டித்தீற்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதுபோல் உள்ளவரை எப்படி தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் கோதையை தலைவராக நீங்களே இருங்கள் என கூறி விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் மற்றும் கார்த்திக் இருவரும் தமிழை தப்பாக பேசி விடுகிறார்கள்.

அசோசியேஷனில் நீங்களே மறுபடியும் தலைவராக இருங்கள் என கூறுகிறார்கள் அதற்கு உமாபதி சார் ஒரு பக்கம் உள்ள நியாயத்தை மட்டும் பார்க்காதீர்கள் தமிழ் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள் என கூற தமிழ் எனக்கு 5 மணி வரை டைம் கொடுங்கள் நான் அதற்குள் என் மீது தப்பு இல்லை என்பதை நிரூபிக்கிறேன் என வெளியே செல்கிறார்.

பிறகு அந்த போன் நம்பரை டிரேக் செய்து யார் ஃபோன் செய்தது என்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள் உடனே தமிழ் தன்னுடைய கம்பெனியில் முன்னதாக திருடி மாட்டிக் கொண்ட நபர் தான் இது போல் செய்ததை கண்டுபிடித்து விடுகிறார்கள் அவரை அழைத்து வந்து அனைவரிடமும் உண்மையை கூற சொல்கிறார்கள். ஆனால் அவர் அர்ஜனை காட்டிக் கொடுக்காமல் தன் மீது பழியை போட்டுக் கொள்கிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த ப்ரோமோ வீடியோவில் அசோசியேஷன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது அதில் முதல் சுற்றில் கோதை 85 வாக்குகளை பெற்றுள்ளார் எனவும் தமிழரசன் 33 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் எனவும் அறிவிக்கிறார்கள்.

உடனே அர்ஜுனனின் மாப்பிள்ளை பட்டாசு எல்லாம் வாங்கி வந்து விட்டேன் நாம தானே ஜெயித்தோம் எனக் கேட்க அத்தை தானே வின் பண்ண போறாங்க அதனால தான் பட்டாசு வாங்கி கொண்டு வந்தோம் என அர்ஜுன் கூறுகிறார் அப்பறம் என்ன கொளுத்திடுவோம் என அர்ஜுனின் மாப்பிள்ளை கூறுகிறார். ஆனால் தமிழ் பொறுத்திருக்களாம் இன்னும் முடியவில்லை என சரஸ்வதி இடம் கூறிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அசோசியேஷன் எலக்சனின் பைனல் கவுண்டிங் முடிந்து விட்டது என கூறி யார் ஜெயித்துள்ளார் என கூற போகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.