விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் கோதை இருவரும் அசோசியேஷன் எலக்ஷனில் நேருக்கு நேராக மோதுகிறார்கள் அதனால் கோதை மற்றும் தமிழ் ஆளுக்கு ஒரு யுக்தியை கடைப்பிடித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் கடைசியாக கோதை பணத்தால் அடிக்கலாம் என எண்ணி அசோசியேஷன் பில்டிங் கட்டுவதற்காக மொத்த பணத்தையும் நானே கொடுக்கிறேன் என பத்து லட்சம் அட்வான்ஸ் பணம் கொடுக்க உடனே தமிழ் பக்காவாக பிளான் போட்டு மொத்த பணத்தையும் கொடுத்து கட்டுவதற்கு இது என்ன கெஸ்ட் ஹவுஸ் இது அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது அதனால் ஒருவரே கட்டிடம் கட்டிக் கொடுத்தால் அவர்களை ஒரு மாதிரியும் மற்றவர்களை வேற ஒரு மாதிரியும் பார்ப்பார்கள்.
அதனால் கண்டிப்பாக இப்படி செய்யக்கூடாது என்பதை தமிழ் திட்டவட்டமாக கூறுகிறார். அப்படி இருக்கையில் அடுத்ததாக என்ன பண்ணலாம் என கோதை யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் 20 கம்பெனி முதலாளிகள் நஷ்டத்தில் இருக்கிறார்கள் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாம் இல்லையென்றால் அடியாட்களை வைத்து பணிய வைக்கலாம் என கூற அதற்கு கோதை கடுப்பாகி கத்துகிறார்.
நான் இதை எப்படி செய்வேன் நீ எதிர்பார்த்த மாப்பிள்ளை என அர்ஜுனை திட்டி தீர்த்து விடுகிறார் அந்த சமயத்தில் கார்த்தி ஒரு கம்பெனியில் ஸ்ட்ரைக் நடக்கிறது அங்கு போய் நாம் இருவருக்கும் சமாதானமாக பேசினால் நமக்கு ஓட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என கூற உடனே கோதை அங்கு கிளம்புகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்தப் பிரமோ வீடியோவில் கார்த்தி மற்றும் அர்ஜுன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கச்சி புருஷனையே கத்தியால குத்தினவன் என போஸ்டர் அடிச்சு ஓட்டுனா யார் ஓட்டு போடுவாங்க அதனால் அதை செய்வோம் என கார்த்திகை ஏற்றி விடுகிறார் கார்த்தியும் அர்ஜுன் பேச்சை கேட்டுகிட்டு ஊர் முழுவதும் தங்கச்சி புருஷனையே கத்தியால் குத்தினவனுக்கு உங்கள் ஓட்டா என போஸ்ட் அடிச்சு ஒட்டி விடுகிறார்கள்.
இரண்டு சிறிய முதலாளிகளிடம் பேசகொண்டு வர உடனே நமச்சி உங்கள் ஓட்டு தமிழுக்கு தான் எனக் கேட்க அது அப்போ ஆனா இப்ப நிலைமை மாறிடுச்சு இப்படி ஒரு மோசக்காரனுக்கு எங்கள் ஓட்டை எப்படி போட முடியும் என்பது போல் கூறி விடுகிறார் என்ன சொல்றீங்க என நமச்சி கேட்க நீங்களே அந்த போஸ்டரை பாருங்கள் என கூறுகிறார் போஸ்டர் பார்த்த நமச்சி அதிர்ச்சடைகிறார். இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.