பொண்டாட்டியை ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ஜுன்.! வசுவை திட்டியதால் சந்திரகலா எடுத்த அதிரடி முடிவு.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum-saraswathiyum-episode-june-30
thamizhum-saraswathiyum-episode-june-30

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு மற்றும் சந்திரகலா இருவரும் தமிழ் மற்றும் சரஸ்வதி பெயரை போட்டு இன்விடேஷன் அடித்து விட்டார்கள். இது கோதைக்கு தெரிந்து விட எதற்காக என்னிடம் கேட்காமல் இன்விடேஷன் அடித்தீர்கள் அவர்கள் பெயரை எதற்கு போட்டீர்கள் என ஆவேசம் அடைகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராகினி இன்விடேஷனை பார்த்துவிட்டு இதுக்காக தான் நீங்க இன்விடேஷன் அடிக்கிறேன்னு சொன்னீங்களா என மரியாதை குறைவாக பேச உடனே கோதை என்ன பேசுற யார்கிட்ட என்ன பேசணும் உனக்கு தெரியாதா என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய புருஷனை கத்தியால் குத்தினவன் இந்த வீட்டுக்கு மறுபடியும் வரணுமா என்பது போல் ராகினி பேசுகிறார்.

ஆனால் வசு என்னோட குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷனில் கண்டிப்பாக அவர்கள் வந்து தான் ஆக வேண்டும் அவர்கள் தான் குழந்தைக்கு பெரியம்மா பெரியப்பா என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு நானும் என் குழந்தையும் உயிரோடு இருக்கிறது காரணமே சரஸ்வதி தான் இந்த வீட்டு படியவே மிதிக்காமல் இருந்த அவங்க என்ன காப்பாற்றினால் தான் நான் பொழைச்சேன் என கூறுகிறார்.

உடனே அர்ஜுனின் அம்மா அதற்கு தான் நம்ம எல்லாம் சேர்ந்து நன்றி சொல்லிட்டோம்ல அப்புறம் என்ன அவங்க எதுக்கு இங்க வரணும். எனக் கூறுகிறார் அதேபோல்அர்ஜுனன் அக்காவும் அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் வீட்டுக்கு வருவாங்களா பேசாம இந்த இன்விடேஷன் தூக்கி எறிஞ்சிட்டு அவர்கள் பெயரை போடாம அடிச்சிடலாம் என கூறுகிறார்.

அதற்கும் வசு எத்தனை இன்விடேஷன் அடிச்சாலும் பெரியம்மா பெரியப்பா அவங்க தானே அவங்க பேர போட்டு தானே ஆகணும் என கூறுகிறார். ஒரு காலகட்டத்தில் உச்சகட்ட கோபம் வந்து வசு அவங்க வந்தா தான் பங்க்ஷன் நடக்கணும் அப்படி இல்லன்னா இந்த ஃபங்ஷனை வேணா என்பது போல் கூறிவிடுகிறார் வசு இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

திடீரென அர்ஜுன் குடும்பம் வீட்டிற்கு உள்ளே போகிறது உடனே அங்கு மூவரும் பேசி கொள்கிறார்கள் அவர்களை வரவிட்டால் நமக்கு அவ்வளவுதான் என்பது போல் கூற உடனே ராகினி வந்தவுடன் ராகினியிடம்  அர்ஜுன் ஏத்தி விடுகிறார் நாங்கள் ஏழ்மையான ஆள் என்பதால் எங்களுக்கு உங்க அம்மா மரியாதையை கொடுக்க மாட்டேங்கிறாங்க இதுவே சந்திரகலாவுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்குறாங்க அப்போ அந்த தமிழ் இங்க வந்து தான் ஆகணும்னா நாம வெளியில போயிடலாம் என்பது போல் பேசுகிறார்கள்.

உடனே ராகினி வெளியே வந்து தமிழ் இங்க வந்தானா கண்டிப்பா நானும் அர்ஜுனும் வெளியே போயிடுவோம் என மிரட்டுகிறார். ஆனால் வசு இந்த மிரட்டலை பார்த்து  உன் மிரட்டலுக்காக பயப்பட மாட்டேன் கண்டிப்பா அவங்க வந்து தான் ஆகணும் என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் அர்ஜுனிடம் கார்த்தி கேட்க என்ன அர்ஜுன் இப்படி பேசுற நீ பாத்துட்டு இருக்க என கூற அவ பிரகனட்டா இருக்கா இந்த மாதிரி சமயத்துல எதுக்கு அவள டென்ஷன் பண்ணிக்கிட்டு என்பது போல் கூறுகிறார்.

கம்பெனியில் ஸ்டேர்டஜி  என்று சொன்னாங்க இப்ப இங்கேயும் இதே ஸ்டேர்டஜி   யூஸ் பண்றீங்களா என வசு கிண்டல் அடிக்கிறார். ஒரு வழியாக வசு இந்த குழந்தைக்கு நான் தான் அம்மா நான் அவங்கள கண்டிப்பா கூப்பிடுவேன் என கூற குழந்தைக்கு அப்பா நான் என்கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும் என வாக்குவாதம் செய்கிறார் கார்த்தி. இப்படியே பேசிக் கொண்டிருக்க கடைசியாக சந்திர கலா எல்லாரும் ஒரு நிமிஷம் இருங்க தமிழ் இந்த வீட்டுக்கு வரக்கூடாது அவ்வளவு தானே அப்ப நான் ஃபங்ஷனை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என கூறிவிடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.