முதன்முறையாக அர்ஜுன் மீது கோதைக்கு வந்த சந்தேகம்.! மாட்டுனடி மாப்ள வெளியானது ப்ரோமோ வீடியோ

thamihzum-saraswathiyum
thamihzum-saraswathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் அரைத்த மாவை அரைக்காமல் புதுவிதமான கதையை கொண்டு நகர்ந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு முடிவில் அர்ஜுன் மீண்டும் கோதை ஆபீஸ்க்கு செல்வதால் அவரை வழிமறித்து தமிழ் மிரட்டுகிறார் அதுமட்டும் இல்லாமல் போட்ட சபதத்தில் தோற்றுவிட்டாய் இனிமே இந்த ஆபீஸ் பக்கமே தலை நீட்ட கூடாது என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் கார்த்தி, நடேசன், கோதை மூவரும் வருகிறார்கள் எதற்காக எங்க டைரக்டரை ஆபீசுக்கு உள்ளே விடமாட்டேன் என்கிறீர்கள் வேண்டும் என்று வம்பு பண்ணுகிறீர்களா என கேட்க அதற்கு நமச்சி போட்ட சபதத்தை கோதை இடம் கூற போகிறார் இதனால் அர்ஜுன் முகம் வாடுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் கோதை மற்றும் நடேசன் அவர்களிடம் வந்து இந்த ஆர்டர் கன்பார்ம் ஆகுவதற்கு என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது நம்மளோட போட்டி போட ரெண்டு மூணு கம்பெனி மட்டும் தான் இருக்கிறது ஆனால் அங்க வேலை செய்யற தொழிலாளியை காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டா இந்த ஆர்டர் நமக்கு கன்ஃபார்ம் ஆகிடும் என கூறுகிறார்.

இதனால் கோவப்படும் கோதை நேர்வழின்னு ஒன்னு இருக்கு அது உங்களுக்கு தெரியாதா மாப்ள என கேள்வி எழுப்புகிறார். கம்பெனியோட பேர கெடுக்க பாக்குறீங்களா மாப்பிள்ளை என கோதை அர்ஜுன் மீது பாய்கிறார் இதனால் அர்ஜுன் மீது கோதைக்கு லேசாக டவுட் வருகிறது.

உடனே காரில் நடேசன் மற்றும் கோதை சென்று கொண்டிருக்கும் பொழுது கொஞ்ச நாளாகவே மாப்பிளை ஏன் இப்படி தப்பான வழியில் போறதுக்கு எல்லா ஐடியாவும் கொடுத்துட்டு இருக்கார்னு எனக்கு தெரியல என கோதை நடேசன் இடம் கேட்கிறார். உடனே நடேசன் கொஞ்ச நாளா இல்லாம ஆரம்பத்தில் இருந்து அப்படித்தான் நடந்துகிட்டு இருக்காரு நமக்கு தான் தெரியாம போயிடுச்சு என்பது போல் கூறுகிறார். உடனே கோதை இனிமே அவர் என்ன செஞ்சாலும் நாம கண்காணிக்கணும் என நடேசன் அவர்களிடம் கோதை கூறி விடுகிறார்.

அர்ஜுன் மீது முழுக்க முழுக்க கோதைக்கு சந்தேகம் வந்துவிட்டது இனி அர்ஜுன் என்ன செய்தாலும் சிக்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.