Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அசோசியேஷன் ஆபீஸில் ஒருவருக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண வேண்டும் என்பதற்காக அனைவரும் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க முன் வருகிறார்கள் ஆனால் தலைவராக இருக்கும் தமிழ் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை அதனால் சரஸ்வதி கம்மலை அடகு வைத்து பணத்தை புரட்டி கொடுக்கிறார்.
ஆனால் இது எப்படியோ கோதைக்கு தெரிய வர நான் தமிழிடம் பேசிக் கொள்கிறேன் என செல்கிறார் ஆனால் அங்கு தமிழை அனைவரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் அதை பார்த்த கோதை வாய் பேச முடியாமல் திகைத்துப் போய் நிற்கிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சரஸ்வதி தோட்டை அடகு வைத்து தான் இந்த பணத்தை ரெடி பண்ணி உள்ளார் என அனைவரின் முன்பும் கூறிவிடுகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த தமிழுக்கு பணம் யார்கிட்டயும் கிடைக்கவில்லை என்பதை நினைத்து அனைவரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன் நக்கலாக வந்து நான்தான் உதவி செய்ய வேண்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
திடீரென கார்த்திக்கு ஒரு கால் வருகிறது அங்கு மெட்டீரியலை இன்று ஆறு மணிக்கு அனுப்பி விடுகிறேன் என கூறுகிறார்கள் பணம் என கேட்ட பொழுது உங்களுக்கு உரியவர்கள் கட்டிவிட்டார்கள் என கூறுகிறார்கள். உடனே அசோசியேஷன் ஆபீஸிலிருந்து பல நபர்கள் வருகிறார்கள் அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க வந்து நிக்க மாட்டோமா என பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் அர்ஜுன் முகம் வாடுகிறது இந்த நிலையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் ராகினியை அர்ஜுனனின் மாமா காரில் அழைத்துக் கொண்டு போகிறார் ஆனால் அவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது போல் தெரிகிறது அதனால் காரை ஒரு இடத்தில் இடித்து விட்டு நிப்பாட்டி விடுகிறார் அதனைப் பார்த்த தமிழ் ராகினிக்கு ஏதாவது ஆயிடப்போகுது என பதறி அடித்து ஓடி வந்து ராகினியை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்.
ராகினியை செக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் டாக்டர் அந்த சமயத்தில் நமச்சி உனக்கு டைம் ஆகிவிட்டது நீ உடனடியாக கிளம்பு ஏற்கனவே ஒரு ஆர்டர் கை மீறி போய்விட்டது அதனால் நீ கிளம்பு என கூறுகிறார் ஆனால் இந்த நிலையில் விட்டுவிட்டு என்னால் கிளம்ப முடியாது வேலையை விட ராகினி தான் முக்கியம் என்பது போல் பேசுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.