அர்ஜுனை மடக்கி பிடித்த தமிழ்.! கோதையிடம் மாப்பிள்ளை பற்றிய உண்மையை கூறிய நமச்சி.! பரபரப்பான தருணங்களுடன் தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum-saraswatiyum-july-3
thamizhum-saraswatiyum-july-3

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  போஸ்டர் அடித்து ஒட்டிய அர்ஜுனை வீடியோ மூலம் நடேசன் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் நடேசன் ஒரு வீடியோவை வெளியிட்டு தமிழ் மீது எந்த தவறும் கிடையாது கண்டிப்பாக உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் எனக் கூறி வீடியோ எடுத்து அனைத்து முதலாளிகளுக்கும் அனுப்பி வைத்தார் நடேசன் இதன் விளைவாக கோதை தோற்றார் தமிழ் ஜெயித்துவிட்டார்.

அப்படி இருக்கும் வகையில் அர்ஜுனுக்கு நடேசன் தான் வீடியோ அனுப்பியது என்று தெரிய வர அதனை கோதை இடம் கூறுகிறார் அதுமட்டும் இல்லாமல் நடேசன் நடு வீட்டில் நிற்க வைத்து கார்த்தி, அர்ஜுன், அர்ஜுன் குடும்பம், ராகினி என அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஏதோ குற்றம் செய்தது போல் நடேசனை அனைவரும் திட்டுகிறார்கள். ஆனால் நடேசன்  தன் மீது எந்த தவறும் கிடையாது கோதையை யாரும்  தவறாக யாரும் பேசி விடக்கூடாது என்பதற்காக தான் இந்த வீடியோவை வெளியிட்ட என தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார்.

அதனைப் புரிந்து கொண்ட கோதை நடேசனை கார்த்தி திட்ட வரும்பொழுது நீ வாய மூடு இவர் யார் தெரியுமா உன்னோட அப்பா இன்னொரு வார்த்தை பேசினா அவ்வளவுதான் என கோதை கார்த்தியை திட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் ராகினி பேச வரும் பொழுது அவர் என்ன தப்பு செஞ்சாரு அவர் நேர்மையா தான் நடந்துருக்காரு. உன் புருஷன் தான் தப்பு செஞ்சது என்னை மீறி போஸ்டர் அடிச்சு ஓட்டுனது உன் புருஷன் தான் என ராகினி மீதும் பாய்கிறார் கோதை.

ஒருவழியாக கோதை நடேசனை புரிந்து கொண்டார் இதனால் இருவரும் பாசமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில்  நமச்சி தமிழிடம் வந்து அந்த அர்ஜுன் இன்னும் ஆபீசுக்கு போறானா என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது வசு கால் செய்து அர்ஜுன் ஆபீஸ்க்கு கிளம்புகிறான் எனக் கூற உடனே தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அர்ஜுன் காரை தடுத்து நிறுத்துகிறார்கள்.

என்ன மாப்பிளை அடிவங்கனுமா ஆபீஸ்க்கு இப்படி கிளம்புற என கேட்க நான் கண்டிப்பா இன்னைக்கு என்ன சொன்னாலும் ஆபீஸ்க்கு போவேன் என கூறுகிறார். அந்த சமயத்தில் கோதை மற்றும் நடேசன் அர்ஜுன் மூவரும் வருகிறார்கள் இங்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்கள் அப்பொழுது நமச்சி தமிழ் தோற்றுவிட்டால் இந்த வேலையை விட்டு ஓடி விட வேண்டும் இந்த தொழிலைவிட்டே ஓடி விட வேண்டும் என அர்ஜுன் சபதம் போட்டதை கூறுகிறார்.

அது மட்டும் இல்லாமல் தமிழ் ஜெயித்துவிட்டால் அர்ஜுன் கோதை ஆபீசுக்கு வரமாட்டேன் என சபதம் போட்டார். ஆனால் சொன்ன வாக்கை உங்க மாப்பிள்ளை காப்பாற்றவில்லை என நமச்சி கோதையிடம் கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.