அந்தர் பல்ட்டி அடிக்கும் சந்திரகலா.. ஷாக்காகி நிற்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி… வைரலாகும் ப்ரோமோ

tamizhum-sarasvathiyum
tamizhum-sarasvathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்தப்ப்ரோமோ வீடியோவில் வசு மயங்கி கிடந்த நிலையில் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார் அப்பொழுது வசுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது வசுவை காப்பாற்றியது சரஸ்வதி தான் என தெரிந்து சரஸ்வதியை பாராட்டிநன்றி கூறுகிறார்கள்.

இதனை சரஸ்வதி தமிழிடம் சொல்ல தமிழ் ஒரே சந்தோஷத்தில் குதிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த ப்ரோமோ வீடியோவில் தமிழ் ஸ்வீட் எடுத்து அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நானும் வந்த குழந்தையை பார்த்திருக்கலாம் என கூற வர வேண்டியதுதானே என சரஸ்வதி கூறுகிறார் அப்பொழுது அங்கு வந்த தேவையில்லாத முகத்தை பார்க்கணும் இருக்கிற நிம்மதியும் போயிடும் என கூறிக் கொண்டிருக்கிறார் தமிழ்.

அந்த சமயத்தில் தமிழையும் சரஸ்வதியும் பார்த்து நன்றி கூற வருகிறார் சந்திரகலாவை பார்த்த தமிழ் அதிர்ச்சி அடைகிறார் ஆனால் அவர் நான் உங்களுக்கு எவ்வளவோ கெடுதல் நினைச்சி இருக்கேன் ஆனா அதை எல்லாம் நீங்க பொருட்படுத்தாமல் நல்லது மட்டுமே செஞ்சிட்டு வரீங்க நீங்க ரொம்ப நல்லவங்க என புகழ்ந்து பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அவர் செய்ததற்கு மன்னிப்பும் கேட்கிறார்.

இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது உண்மையாலும் சந்திரகலா நல்லவளாக திருந்தி விட்டளா இல்லை போகப் போக வில்லத்தனத்தை ஏதாவது காட்டுவாளா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.