Thamizhum saraswathiyum ( தமிழும் சரஸ்வதியும் ) : தமிழும் சரஸ்வதியும் எபிசோடில் தமிழ் கம்பெனியை அர்ஜுன் ஆல் வைத்து எரித்து விடுகிறார் இதனால் தமிழ் பணத்திற்காக அங்குமிங்கும் தேடி அலைகிறார். ஆனால் எங்கு போனாலும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை இதனால் தமிழ் உடைந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் உமாபதி சார் வந்து ஹார்ட் ஆபரேஷனுக்காக ஹெல்ப் வேண்டும் என கேட்கிறார். அவரிடம் ஹெல்ப் கேட்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த தமிழுக்கு அதுவும் அதிர்ச்சி தான். வேறு வழியில்லாமல் இப்பொழுது அசோசியேஷன் அக்கவுண்டில் பணம் இல்லை இதனை நாம் அசோசியன் ஆபீஸில் வைத்து பேசி விடலாம் என கூறுகிறார்.
இந்த நிலையில் ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அசோசியேஷன் ஆபீஸில் இவருக்கு தான் ஹார்ட் ஆபரேஷன் இவருக்காக தான் பணம் வேண்டும் என முறையிட்டோம் என கூற ஆனால் தமிழ் சார் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கலாம் என கூறினார் அதேபோல் முதல் ஆளாக அவர் 25 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார் என பெருமையாக பேசுகிறார்கள்.
உடனே கோதை நான் அன்று என் மகனிடம் தோற்று விட்டேன் என கொஞ்சம் சங்கடப்பட்டேன் ஆனால் இன்று பெருமைப்படுகிறேன் என் மகனிடம் தோற்றது எனக்கு பெருமையாக இருக்கிறது இப்படி ஒரு தலைவனை தான் நீங்கள் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என பேசுகிறார்.
அடுத்த காட்சியில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அதிரடியாக அர்ஜுன் வீட்டிற்குள்ளேயே நுழைகிறார் இப்ப கூட ஒரு பிரச்சனையும் கிடையாது நீங்க ஓகே சொல்லுங்க நான் பணம் கொடுத்து உதவுகிறேன் என கிண்டலாக பேசுகிறார். அதற்கு கார்த்தி ஒழுங்கா ஓடிட அடி வாங்கி செத்து விடாதே என முறைக்கிறார்.
ஆனால் அர்ஜுனின் மாமா ஆர்டர் இல்லாம அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாம இருக்கிறீங்க ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா ஓவரா தான் பண்றீங்க என மிகவும் தரகுறைவாக பேசுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இருக்கிற கோபத்துக்கு அர்ஜுன் மற்றும் அர்ஜுனன் மாமாவுக்கு செமத்தையாக அடி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.