விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் தமிழ் டெலிவரி பண்ண வேண்டிய பீஸை உமாபதி கம்பெனிக்கு எடுத்து செல்கிறார் ஆனால் 50 பீஸ் திருடு போய்விட்டது இதனை எப்படி சொல்லி சமாளிக்க போகிறோம் என சென்றால், உமாபதி எதுக்கெடுத்தாலும் காரணமாக சொல்லுவீங்களா உங்க மெட்டீரியல் வேண்டாம் ரா மெட்டீரியலை திருப்பி கொடுங்க என உமாபதி தமிழிடம் சொல்லிவிடுகிறார்.
தமிழ் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் தமிழின் அப்பா சொத்து பத்திரத்தை கொடுத்து நீட்ட அதை வாங்க மறுக்கிறார் தமிழ். பின்பு திருடியது யார் என்று நமச்சி தமிழிடம் கூற உடனே அந்த ஒர்க்கரை அடித்து துவைக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் போலீசில் பிடித்துக் கொடுக்க முடிவு செய்கிறார்கள்.
ஆனால் தமிழ் இவரை கூப்பிட்டு போயிட்டு உண்மையெல்லாம் சொல்ல வைக்கணும் அப்பதான் நம்மள நம்புவார் உமாபதி சார் என திருடிய வரை கூட்டிக்கொண்டு போய் உமாபதி சாரிடம் ஒப்படைகிறார்கள், அவர் அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார் உடனே உமாபதி தமிழ் திருடியவர்கள் என அனைவரையும் இழுத்துக் கொண்டு கோதை இண்டஸ்ட்ரியல் செல்கிறார்கள்.
அங்கு சென்ற உமாபதி கிழி கிழி என்று கிழிக்கிறார் அதற்கு அர்ஜுன் எதுவாயிருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம் என சமாளிக்கிறார், அர்ஜுனை வாய்க்கு வந்தபடி உமாபதி சார் பேசியதால் கோதை எங்க கம்பெனில வந்து எங்க மாப்பிள்ளையவே உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா என கேட்க உடனே உமாபதி சார் இவ்வளவு கீழ்த்தரமான ஆளாய் இருப்பாய் என்று நான் நினைச்சு கூட பார்க்கல என அர்ஜுனனை பார்த்து கேட்கிறார் இவனுடைய சுய ரூபம் தமிழ் கம்பெனியில் இருந்து 500 ஸ்பேர் பார்ட்ஸ் திருடிவிட்டான் என கோதை இடம் சொல்கிறார்.
இன்னையோட நம்ம பிசினஸா முடிச்சுக்கலாம் இனிமே உங்களுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உமாபதி சார் கோதையிடம் கூறிவிடுகிறார் இதனால் கோதை அதிர்ச்சியாகிறார்.