தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் உமாபதி ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு முதலாளிக்காண அசோசியேஷன் தலைவராக நிற்பதற்கு அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது உமாபதி சார் தமிழை நீங்கள் நிற்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் தமிழ் அது சரிப்பட்டு வராது என பின் வாங்குகிறார். கோதை அம்மா தானே நிக்கிறாங்க அவங்களை எதிர்த்து நான் ஏன் நிக்கணும் என்னை ஏன் வேலைய பாக்க விடுங்க எனக் கூறுகிறார்.
பின்பு உமாபதி சார் கூறியதை சரஸ்வதி மற்றும் நமச்சி அவர்களிடம் கூறுகிறார். ஆனால் சரஸ்வதி மற்றும் நமச்சி இருவரும் நல்ல விஷயம் தான் நிக்கலாமே எனக் கூறுகிறார்கள். எலக்சன் என்றால் வேலை பாதிக்கும் எனவும் எப்ப பாரு அதே வேலையாக இருக்கும் எனவும் தமிழ் கூறுகிறார். அந்த சமயத்தில் தமிழரிடம் வேலை பார்க்கும் நபர் ஒருவர் நீங்கள் எலக்ஷனில் நிற்க போறிங்களாமே ரொம்ப சந்தோஷம் எனக் கூற ஆனால் அம்மாவை எதிர்த்து நிற்கிறது சரி வராது என்பது போல் கூறி விடுகிறார்.
என்ன சொல்றீங்க என சரஸ்வதி கேட்க அதற்கு ஆமாம் கோதை அம்மா முதலில் நிற்க முடியாது எனக் கூறிவிட்டார். அதன் பிறகு அசோசியேஷன் மற்றும் பல நபர்களின் வற்புறுத்துதலால் மீண்டும் அவரே நிற்கிறார் அவர்களை எதிர்த்து தான் நீங்கள் நிற்க போகிறீர்கள் என்பதை கூறினால் உடனே தமிழ் வேண்டாம் ஏற்கனவே என்ன செய்தாலும் அவங்க கம்பெனிக்கு எதிராக செய்கிறோம் என நினைக்கிறார்கள் அதனால் கண்டிப்பாக இதில் நிற்க போவதில்லை என முடிவு எடுத்து தமிழ் கூறி விடுகிறார்.
அது மட்டும் இல்லாமல் உமாபதி சார் அவர்களிடமும் போன் செய்து நடந்த அனைத்தையும் கூறுகிறார். பிறகு எலக்ஷனில் இருந்து விலகுகிறேன் என்பதையும் கூறுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி வீட்டிற்கு நடேசன் வந்துள்ளார் காபி குடித்துக் கொண்டே அர்ஜுன் சம்பந்தப்பட்ட வீடியோ டெலிட் ஆகிவிட்டதாக கூறுகிறார் அந்த வீடியோவை எடுக்க வாய்ப்பே இல்லையா என சரஸ்வதி கேட்கிறார் வேற ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பது போல் நடேசன் கூறிவிடுகிறார்.
உடனே தமிழ் எலக்ஷனில் நிக்க போறதை நடேசன் கேட்க ஆமாம் மாமா என சரஸ்வதி கூறுகிறார் ஆனால் கோதையை எதிர்த்து நிற்பது எனக்கு சரியாக வரவில்லை இன்னும் தமிழ் மீது அவளுக்கு கோபம் தான் அதிகரிக்கும் எனவும் கூறிவிடுகிறார் அத பத்தி பயப்பட வேண்டாம் மாமா தமிழ் நிற்க முடியாது என கூறிவிட்டார் என கூறுகிறார் சரஸ்வதி. இந்த விஷயத்தை முதலில் கோதையிடம் கூற வேண்டும் அப்பவாவது அவள் மனது மாறுகிறதா என்பதை பார்க்கலாம் என நடேசன் கிளம்புகிறார்.
வீட்டில் இருக்கும் கோதையிடம் புது டெண்டர் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் கார்த்தி அப்பொழுது நடேசன் எலக்சன் பற்றி பேச்சை எடுத்தவுடன் அனைவரும் தமிழ் போட்டிக்காக நிற்கிறார் எனவும் தமிழ் மீது குற்றம் சாட்டி வந்தார்கள் ஆனால் நடேசன் தமிழ் நிற்கவில்லை என்பதை கூறி கோதை மனதில் புன்னகையை வர வைத்தார் என் வளர்ப்பில் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறது என கூறி விடுகிறார் கோதை. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என அர்ஜுன் பயந்து சதி திட்டம் தீட்டுகிறார்.
உடனே தன்னுடன் வேலை செய்யும் ஊழியர் ஒருவரிடம் நமச்சி அவர்களிடம் கோதை நிற்கவில்லை என்பதை போல் சொல்கிறார் அதேபோல அந்த ஊழியர் நமச்சி அவர்களிடம் கோதை நிற்கவில்லை தமிழ் நின்றால் சந்தோஷம் என்பது போல் பெருமையாக பேசி விட்டு செல்கிறார். அதனால் நமச்சி தமிழை நிற்பதற்கு வற்புறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.