விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வசு வசுவின் அம்மா மற்றும் அர்ஜுன் அம்மா கார்த்தியின் அம்மா என அனைவரும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அர்ஜுனின் அம்மா கொஞ்ச காலம் அம்மா வீட்டில் தான் குழந்தை பிறந்த பிறகு இருப்பார்கள் என கூறுகிறார்.
அதுதான் வழக்கம் எனக் கூற அதற்கு உடனே வசு நான் என்ன இங்க இருக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா? என கேட்கிறார் அப்படியெல்லாம் இல்லை இதுதான் வழக்கம் அதான் கேட்டேன் என கூற உடனே கார்த்தியின் அம்மாவும் அப்பாவும் சம்மந்தி என்ன விருப்பப்படுறாங்கன்னு பஸ்ட் சொல்லட்டும் எனக் கூற உடனே சந்திரகலா என் பொண்ணோட விருப்பம் தான் என்னோட விருப்பம் அவளுக்கு எங்க இருக்கணும்னு தோணுதோ அங்கே இருக்கட்டும் என கூறுகிறார்.
வசு நான் இங்கேயே இருக்கம்மா எனக் கூற ஓகே சம்மதம் கூறுகிறார் சந்திர கலா, இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் நீங்களா இப்படி பேசுவது என கேள்வி எழுப்புகிறார்கள், அதற்கு சந்திர கலா முன்னாடி எல்லாம் எனக்கு புடிச்ச மாதிரி எனக்கு என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன் ஆனால் எனக்கு புரிய வச்சவ சரஸ்வதி தான் சரஸ்வதி மட்டு இல்லனா இந்நேரம் என் பொண்ணு உயிரோடவே இருந்திருக்க மாட்டாள் என கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் சந்திரகலா எனக்கு ஒரு யோசனை தோணுகிறது என சம்மதியிடம் கூற நீங்க தமிழையும் சரஸ்வதியும் மறுபடியும் ஏத்துக்கணும் நானே இவ்வளவு மாறிட்டேன் நல்லது செஞ்ச அவங்கள ஏன் ஏத்துக்க மாட்டேங்கறீங்க என கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு உடனேசந்திரகலாவின் பையன் ஆமா சரஸ்வதி மட்டும் இல்லன்னா இன்னைக்கு என் அக்கா உயிரோடவே இருந்து இருக்க முடியாது எனக் கூறுகிறார்.
அவங்க இங்க இருந்தா என் அக்காவுக்கும் ஒரு சப்போர்ட் தான் எனக்கூற. அதற்கு உடனே கார்த்தியின் சகோதரி மறுபடியும் தமிழும் சரஸ்வதியும் இங்கே சேர்த்துக்கவே கூடாது அவங்க இங்க வந்தா நான் வெளியில போயிடுவேன் எனக் கூற அதற்கு கார்த்தி நீ அமைதியா இரு முடிவெடுக்க வேண்டியது அம்மா, நீ ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்க எப்ப பார்த்தாலும் இதையே சொல்லி என கார்த்திக் கூறுகிறார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்தியுன் அம்மா யாரும் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் வெளியே போனவங்க யாரும் வரவும் வேண்டாம் என ஒரேடியாக கூறி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் சந்திரகலாவிடம் நீங்க எப்ப வேணாலும் வரலாம் எப்ப வேணாலும் குழந்தையை பார்க்கலாம் வசுவை பார்க்கலாம் ஆனா இந்த வீட்டுக்கு யாரு வரணும் யாரு போகணும்னு நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் உங்களுக்கு உரிமை இல்லை.
இப்படி பேசுரேன் என்று என்ன தப்பா நினைச்சுக்காதீங்க என சகுந்தலாவிற்கு கார்த்தியின் அம்மா தரமான பதிலடி கொடுக்கிறார். இதனால் அர்ஜுனின் குடும்பம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அடுத்த காட்சியில் தமிழ் சரஸ்வதி மற்றும் அவருடைய நண்பர்கள் மூவரும் பினான்சியரிடம் செல்கிறார்கள் அங்கு பினான்சியர் இவர்களை பார்த்தவுடன் பதற்றமாக இருக்கிறார் அதற்கு தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் முன்பு தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் நாங்கள் சொந்த காலில் நிற்பதற்காக உங்களிடம் வருகிறோம் சொந்தக்காரங்க கிட்ட பணத்தை வாங்குவது எனக்கு சுத்தமா பிடிக்கல எங்களுக்கும் உதவுவதற்கு ஒருத்தவுங்க இருக்காங்க ஆனா வேணாம் என்று தான் உங்களிடம் வந்துள்ளேன் என கூறுகிறார்கள் இதனால் பினான்ஸ்யர் பணம் கொடுக்க சம்மதிக்கிறார் பணத்தையும் எடுத்துக்கொண்டு வர சொல்கிறார்.
அடுத்த காட்சியில் கார்த்தி மற்றும் வசு இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இன்னைக்கு லீவு போட்டுட்டு தம்பி கூட இரு என வசு கூறுகிறார் அதற்கு வேலை அதிகமா இருக்கு நான் சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் வசுவின் அம்மா வருகிறார் வசுவின் அம்மா குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் வசுவிடம் இனிமேதான் நீ நல்லா சாப்பிடணும் என அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது வசு நீங்க தமிழையும் சரஸ்வதியும் திரும்ப இங்க கூட்டிட்டு வர சொல்றதில்ல எனக்கு ரொம்ப சந்தோஷம், நீங்க இப்படி பேசுவீங்க நான் நினைச்சு கூட பாக்கல என வசு கூற அதற்கு சந்திரகலா அவங்க ரொம்ப நல்லவங்க என கூறிக் கொண்டிருக்கிறார் இவங்க ஏத்துக்கிறாங்க ஏற்றுக்கொள்ளாம இருக்காங்க அது அடுத்த பிரச்சனை நீங்க புரிஞ்சுக்கிட்டிங்களா அதுவே போதும் என வாசு கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் சரஸ்வதி மெசேஜ் பண்ணுகிறார் அவருக்கு பணம் கிடைத்து விட்டதை கூறுகிறார். உடனே சகுந்தலா எனக்கு தெரியும் அவங்க அடுத்தது இந்த பினான்ஸ்யார தான் போவாங்கன்னு அதனால நானே பணத்தை கொடுத்து கொடுக்க சொல்லிட்டேன் அவுங்களுக்கு உதவனும் நான் முடிவு பண்ணிட்டேன் சரஸ்வதி செய்த உதவிக்கு முன்னாடி இந்த அமௌன்ட் எல்லாம் சாதாரண என கூறிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சந்திரகலா கௌரவம் பணம் இதை எல்லாத்தையும் விட முக்கியம் மனசு தான் என கூறிக் கொண்டிருக்கிறார் தன்னுடைய மகள் வசு மெய் மறந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கார்த்தியின் கம்பெனியிலிருந்து பல ஆட்கள் தமிழ் கம்பெனிக்கு வந்து வேலைக்காக நிற்கிறார்கள் தமிழ் வரட்டும் என அவரின் நண்பர் கூறுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.