ரவுடி சகவாசம் உங்களுக்கு எதற்கு, நடு வீட்டில் நிற்க வைத்து அனைவரின் முன்பும் அர்ஜுனை கேள்வி மேல் கேள்வி கேட்கும் கோதை.!

Thamizhum saraswathiyum :  தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ரவுடிகளை பார்த்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வருகிறார். அந்த சமயத்தில் நடேசன் கோதையிடம் ரவுடிக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்றாங்க என்பதை கூறிவிடுகிறார். இதனால் அர்ஜுன் வந்தவுடன் கோதை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் அந்த சமயத்தில் நடேசன் நீ எம்பிஏ படிச்சிருக்க அவன் பத்தாம் கிளாஸ் கூட பாஸ் பண்ணல எப்படி ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சவங்க என கேட்க ஸ்கூலில் ஒன்றா படித்தோம் என சமாளிக்கிறார்கள்.

ஆனால் அர்ஜுன் முகத்தில் பதட்டம் தெரிவதை கோதை பார்த்து விடுகிறார் அது மட்டும் இல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிக் கொண்டிருக்கிறார், இந்த சமயத்தில் ராகினி வந்து அவருடைய பணத்தை எடுத்து தானே அவர் பிரண்டுக்கு கொடுத்தார் அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க ஒரு வழியாக அர்ஜுனுக்கு ஒரு சப்போர்ட் கிடைத்ததால் கோதை நடேசன் அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார்.

அடுத்த காட்சியில் ராகினியிடம் பேசம இந்த  வேலையை விட்டுடலாம்னு தோணுது என ஏத்தி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் இப்ப அத்தையும்  மாமாவும்  என்னை மதிக்கிறதே கிடையாது யார் பேச்சை கேட்டுகிட்டு இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்கன்னு தெரியல என அர்ஜுன் ராகினியிடம் சொல்லிக் கொண்டிருக்க இனிமே ஒரு வார்த்தை அவங்க பேச மாட்டாங்க இனிமே நான் பாத்துக்குறேன் என கூறுகிறார் இதனால் அர்ஜுன் சந்தோஷப்படுகிறார்.

மற்றொரு பக்கம் சரஸ்வதி புதிய மெக்கானிக் ஷெட்டை வாங்கி உள்ளதால் அதற்கு சின்னதாக பூஜை செய்யலாம் என ரெடி பண்ணுகிறார்கள் அதற்கு வசுவையும் நடேசன் அவர்களையும் கூப்பிடுகிறார்கள். சரஸ்வதி போன் செய்து கூப்பிடும் பொழுது அத்தை வந்தா நல்லா இருக்கும் என கூற அதற்கு வசு அத நான் பாத்துக்குறேன் எப்படியாவது கூட்டிட்டு வரேன் எனக்கு கூறுகிறார்.

கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு நடேசன் அவர்களையும் அழைக்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் கோதையையும்  கோவிலுக்கு போகலாம் என அழைத்து செல்கிறார்கள் ஆனால் அனைவரும் சரஸ்வதி மெக்கானிக் ஷாப் திறப்பதற்கு தான் செல்கிறார்கள் அந்த பக்கம் கோதை வருகிறார் என்பதை தமிழுக்கு தெரியாமல் சரஸ்வதி மறைத்து விடுகிறார்.

சரஸ்வதி வாசலிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார் நேரம் ஆகிறது என தமிழ் கூறியும் இன்னும் கொஞ்ச நேரம் இருங்க வெயிட் பண்ணலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment

Exit mobile version