தமிழுக்கும் நமச்சிக்கும் ஏற்பட்ட விரிசல்.! அர்ஜுனனின் சூழ்ச்சி வளையில் சிக்கிய கார்த்தி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய பரபரப்பான எபிசோட்.!

thamizhum sarashwathiyum
thamizhum sarashwathiyum

தமிழ் சரஸ்வதி என்டர்பிரைஸ் கம்பெனிக்கு பைக்கில் வருகிறார் அப்பொழுது அவரின் நண்பர் பதற்றமாக ஓடிவந்து தமிழ் என்ன ஆச்சு எங்க போய்ட்டு வர ஏன் முகம் வாடி இருக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு தமிழ் யாரை நம்புறது யாரை நம்ப கூடாதுன்னு தெரியல எனக்கு  நாம முழுசா நம்பி இருக்காங்க தான் நம்மள ரொம்ப காயம் படுத்துகிறார்கள் என கூறுகிறார்..

உடனே அவர் நண்பர் என்னப்பா ஆச்சு ஏன் இப்படி நெகட்டிவா பேசுற என கேட்கிறார் உடனே சரஸ்வதி இப்படி பண்ணுவாள் நான் நினைச்சு கூட பாக்கல நம்மள நல்லா ஏமாத்திட்டா டா எனக் கூற அவரின் நண்பர் என்னப்பா சொல்ற ஒன்னும் புரியல  எனக்கு என கூறுகிறார் உடனே தமிழ் அத்தனை டைம் படிச்சு படிச்சு சொன்ன இல்ல வேலைக்கு போகக்கூடாது என்று ஆனால் இத்தனை நாளா வேலைக்கு தான் போயிட்டு இருக்கா சரஸ்வதி எனக் கூறுகிறார்.

உடனே தமிழ் ஒரு மெக்கானிக் செட்டில் நம்ம வண்டியை விட்டோம்ல அங்க கூட ஒரு பொண்ணு இருந்ததுன்னு சொன்னேனே அந்த பொண்ணு வேற யாரும் இல்லடா சரஸ்வதி தான் என கூறுகிறார். நாம ரெண்டு பேரையும் நல்லா முட்டாள் ஆக்கிட்டாங்க எனக் கூறுகிறார் உடனே அவரை நண்பர் நான் சொல்றதை கேளு கொஞ்சம் பொறுமையா இரு நான் கூற தமிழ் எப்படிடா பொறுமையா இருக்க சொல்ற பொய் சொல்லிட்டு இருக்கா அவ தாலி செயின் அடகு வைக்கல   வேலைக்கு போய் தான் இத்தனை நாள் காசு கொடுத்து இருக்கா என கூறுகிறார். இது எதுவுமே தெரியாம நான் இவ்ளோ நாளா ஏமாளியா இருந்து இருக்கேன் என்ன நெனச்சா எனக்கு அசிங்கமா இருக்கு என நண்பரிடம் கூறிக் கொண்டிருக்கிறார.

அதுமட்டுமில்லாமல் தமிழ் அவங்க அம்மாவும் பாட்டியும் எல்லாரும் முடியும் அசிங்க படுத்திட்டு போனாங்க நான் தான் அவளை வேலைக்கு அமைச்சு உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கேன் பேசிட்டு போனாங்க இங்க வந்து எல்லாரும் சத்தம் போட்டுட்டு போனாங்க எனக்கு அசிங்கமா ஆயிடுச்சு எனக் கூறுகிறார் தமிழ் உடனே அவரை நண்பர் அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சா என கூறுகிறார்.

மேலும் தமிழ் அவங்க சொன்னப்ப கூட நான் நம்பவே இல்லை நாம மெக்கானிக் செட் போனப்ப என் கண்ணு முன்னாடியே ஒரு தாலி செயின்  போட்டுகிட்டு வேலை பார்த்துட்டு இருக்கா எனக்கு கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அவரை நண்பர் திட்டுனியா என கேட்க திட்டாம என்ன பண்றது அங்கேயே வச்சு நல்லா திட்டி விட்டேன் என கூறுகிறார். திரும்ப வீட்டுக்கு வந்து என்னென்னமோ காரணம் சொல்ல பார்க்க பார்த்தா செஞ்ச தப்ப ஒத்துக்க மாட்டா அது கொஞ்சம் நியாயப்படுத்த பார்க்கிறா.

நான் சொல்றதையும் மீறி செஞ்சிருக்கான அவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என தமிழ் பேசுகிறார் நாம யாரெல்லாம் உயிர் நினைக்கிறோமோ அவங்க எல்லாரும் முதுகுலையே குத்துறாங்க நானும் எவ்வளவுதான் தாங்கிக்க முடியும் என தமிழ் கதறுகிறார். உடனே அவரை நண்பர் என்ன மன்னிச்சிடுப்பா என கூறுகிறார் அவ பண்ண தப்புக்கு நீ ஏன் மன்னிப்பு கேக்குற என தமிழ் கேட்க உடனே அவரை நண்பர் சரஸ்வதி வேலைக்கு போவது எனக்கு ஏற்கனவே தெரியும் எனக்கூறி தமிழ் தலையில் இடியை இறக்கிறார்.

தமிழிடம் நான் சரஸ்வதி வேலை செய்கிற அப்ப நானும் பார்த்தேன் நானும் ஏன் எதுக்குன்னு கேட்டேன் அதுக்கு தமிழ் முன்னேற்றத்தில் எனக்கும் ஒரு பங்கு இருக்கணும் என கூறினார் என அவரின் நண்பர் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் சரஸ்வதிக்கு அந்த வேலை புடிச்சி இருக்குன்னு சொன்னதாக அவர் தமிழிடம் கூறுகிறார். எதுக்கு தாலி செயின் எல்லாம் அடக்க வைக்கணும் அப்படி என்ன கூறியதாக அவரின் நண்பர் தமிழிடம் மொத்தத்தையும் கூறி விடுகிறார்.

எல்லா உண்மையும் தெரிந்து கொண்ட தமிழ் அவரின் நண்பரை செவுளில் அறைந்து விடுகிறார் உடனே தமிழ் நீயும் சேர்ந்து என்னை ஏமாற்றி இருக்கியா என வெளுத்து வாங்குகிறார். அவரின் நண்பர் எவ்வளவு கெஞ்சியும்   பாட்டியும் அவங்க அம்மாவும் என் பொண்ணோட நகையை வித்துதான் கம்பெனி நடத்துறீங்க இப்ப என் பொண்ணு தான் சம்பாதிச்சு போடுறா  என எவ்வளவு கேவலப்படுத்தினாங்க என அவரின் நண்பர்களிடம் கூறுகிறார் தமிழ்.

அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டிலிருந்து வந்ததுக்கு பிறகு எனக்கு யாரு வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் போதும் என சொன்னேன்ல என் நம்பிக்கையை உடைச்சிட்டீங்களா என பீல் பண்ணி பேசுகிறார். என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டு இல்ல என தமிழ் கோபப்படுகிறார் எப்படா உங்களுக்கு ஏமாத்தணும்னு தோணுது. இனிமே வாழ்க்கை ஃபுல்லா நீங்க ரெண்டு பேரும் எப்ப ஏமாத்துவங்கன்னு பயந்துகிட்டே வாழணுமா என கூறுகிறார். அவ தான் அப்படின்னு உன்கிட்ட பேசலாம்னு வந்தா நீயும் சேர்ந்து ஏமாத்திட்டியே டா என நண்பனிடம் கேட்கிறார்.

உடனே அவரை நண்பரை என் கண்ணு முன்னாடி நிக்காத இங்க இருந்து கிளம்பிடு கோவத்துல என்ன பண்ணுவேன்னு தெரியாது ஒழுங்கா கிளம்பிடு எனக் கூறுகிறார். அவர் நண்பரும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அடுத்த காட்சியில் தமிழின் தங்கச்சி புருஷன் அவர்களிடம் வந்து ஒருவர் இவர்தான் ரா மெட்டீரியல் ஏஜென்ட் எனக்கூறி உள்ளே அழைத்து செல்கிறார்கள். உள்ளே சென்றவுடன் தமிழின் தம்பியை கார்த்தி சார் இவர்தான் ரா மெட்டீரியல் ஏஜென்சி என அறிமுகம் செய்கிறார்.

உடனே கார்த்தி ஏற்கனவே மெட்டீரியல் தான் வாங்கியாச்சு என கூற அதற்கு அவர் நம்மகிட்ட இருக்கிற மெட்டீரியல் ஒன் ஆர் டூ மன்த்ல முடிஞ்சிடும். இவர்ட்ட வாங்கிட்டு நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கவர்மெண்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறது எல்லாம் மெட்டீரியல் ரேட்டும் ஏறிடும் அதனால நீங்க வாங்கி வச்சுக்கிட்டு உங்களுக்கு தான் யூஸ்.

மொத்தம் மெட்டிரியலையும் கார்த்தி தலையில் கட்டுகிறார் அர்ஜுன் அதுமட்டுமில்லாமல் கம்பெனிக்கு சேர்மன் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி தமிழின் நண்பர் வீட்டில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கேசரஸ்வதி அவரின் நண்பரிடம் சொல்வதற்கு முன்பே அவரே அனைத்தையும் சொல்லிவிடுகிறார்.

சரஸ்வதி தமிழன் நண்பரிடம் அனைத்தையும் கூறி புலம்பி கொண்டிருக்கிறார். உடனே சாப்பிடுவதற்கு தமிழை நான் கூட்டிக் கொண்டு வருகிறேன் என சரஸ்வதி எண்டர்பிரைசுக்கு கிளம்புகிறார் அவரின் நண்பர். உன்ன விட்டா எனக்கு யாரு இருக்கா வா சாப்பிட போகும் என கெஞ்சி கெஞ்சி கூப்பிடுகிறார் தமிழை உடனே அவர் நண்பரை கம்பெனியை விட்டு வெளியே இழுத்து போய் வெளியே போயிடு எனக் கூறுகிறார்.

அவர் நண்பரும் கோபத்தில் வெளியே கிளம்பி விடுகிறார் பின்பு தமிழ் எவ்வளவு கூப்பிட்டும் வராமல் இருக்கிறார் அதனால் அவரைத் தேடி தமிழ் கிளம்புகிறார். அனைவரிடமும் தமிழ் விசாரித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் நண்பர் கடைசி வரை கிடைக்கவில்லை. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.