விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ஜுன் குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறது. அடுத்த காட்சியில் வசுவிற்கு ஜூஸ் குடிக்க கூறுகிறார் வேலைக்கார பெண். அதுமட்டுமில்லாமல் கார்த்தி ஆபீஸ் கிளம்பும் நேரத்தில் கோதையின் கணவர் ஆஃபீஸ்க்கு அப்புறம் போகலாம் ஒரு முக்கியமான இடத்திற்கு போயிட்டு வரலாம் என கூறுகிறார். அதற்கு இன்னைக்கு எந்த விசேஷ நாளும் கிடையாது என கோதை கேட்க இன்னைக்கு விசேஷ நாள் தான் அத்தை என வசு கூறுகிறார்.
உடனே வசு இன்னைக்கு நல்ல நாள் தான் அத்தை சரஸ்வதிக்கும் தமிழுக்கும் ஃபர்ஸ்ட் வெட்டிங் டே எனக் கூற ராகினி காண்டாகிறார் அது மட்டும் இல்லாமல் கோதையும் அவர்கள் பேச்சை இங்கே ஏன் எடுக்கறீங்க என கேட்க, கோதையின் கணவர் நான் சொல்ல வந்த விஷயமே வேற எனக்கு கூறுகிறார்.பிறகு கோதைக்கு கடந்த வருடம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் பிறகு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததால் இனிமே எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக பரிகாரம் செய்வதற்காக அனாதை ஆசிரமத்திற்கு சென்று உணவு கொடுக்கலாம் என பிளான் பண்ணி இருக்கேன் அதனால்தான் போகவேண்டும் என கூறுகிறார்.
எல்லாரும் வர வேண்டாம் கார்த்தி, மாப்பிள்ளை மட்டும் வந்தால் போதும் என கூறிவிட்டு கோதை செல்கிறார் அடுத்த காட்சியில் தமிழ் சரஸ்வதி நமச்சி ஆகிய மூவரும் ஒரு முக்கிய இடத்திற்கு செல்கிறார்கள். பைக்கில் செல்லும் பொழுது தமிழும் சரஸ்வதியும் ரொமான்ஸ் செய்து கொண்டும் ஐ லவ் யூ சொல்லிக் கொண்டும் செல்கிறார்கள். மேலும் சரஸ்வதியும் கோதையும் ஒரே அனாதை ஆசிரமத்திற்கு தான் வருகிறார்கள்.
அப்பொழுது கோதை ஆதரவற்றோர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சரஸ்வதியும் வருகிறார். ஆனால் கார்த்தி அர்ஜுன் கோதைக்கு இவர்கள் வருவது பிடிக்கவில்லை. கோதையை அறிமுகம் செய்கிறார் அனாதை ஆசிரமத்தை நடத்துபவர் ஆனால் இவர்களுக்கு அறிமுகமே தேவையில்லை என நமச்சி நச்சு பதிலடி கொடுக்கிறார்.
பிறகு கோதை மற்றும் சரஸ்வதி இருவருமே உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பெரியவர்களிடம் தமிழும் சரஸ்வதியும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். அந்த சமயத்தில் ஆசிரமம் நடத்தும் நபர் கோதை மற்றும் அவரின் கணவரிடம் அட்சதையை கொடுத்து இவர்களுக்கு இன்று திருமண நாள் வாழ்த்துகள் என கூறுகிறார் வேறு வழியில்லாமல் தமிழ் சரஸ்வதி காலில் விழ இருவரும் வாழ்த்துகிறார்கள் இதனால் சரஸ்வதி மிகவும் சந்தோஷம் அடைகிறார்.
அடுத்த காட்சியில் சரஸ்வதி மெக்கானிக் செட்டுக்கு செல்கிறார் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சீனியர் சாப்பிட போகிறேன் என கூற அதற்கு இரு சீனியர் உங்களுக்கு சாப்பாடு எடுத்துகிட்டு வந்து இருக்கேன் சேர்ந்து சாப்பிடலாம் என சரஸ்வதி கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் பொழுது சீனியர் ஃபீல் பண்ணுகிறார். மேலும் வீட்டிற்கு வந்த கோதையின் கணவர் தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு ஆசீர்வாதம் செய்ததை கூற அதற்கு அர்ஜுன் குடும்பம் நீங்க போற இடத்துக்கு எப்படி அவங்க வரலாம் என ஏத்தி விடுகிறார்.
மேலும் கோதை யார் வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் கேட்டாலும் ஆசீர்வாதம் செய்வேன் என கூறிவிட்டு சென்று விடுகிறார். கடைசியாக கோதையின் கணவர் அன்னைக்கு அர்ஜுன் மாப்பிள்ளைக்கு என்ன நடந்தது என்று தெரிஞ்சா எல்லாரும் மாறி விடுவாங்க என ஒரு பெரிய குண்டை வீசிவிட்டு செல்கிறார் இது அர்ஜுன் குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைக்கிறது இத்துடன் எபிசொட் முடிகிறது.