Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனின் குடும்பத்தில் அர்ஜுனுக்கு கல்யாண நாள் என்பதால் தடபுடலாக சாப்பாடு ரெடி செய்துள்ளார்கள் சிக்கன், மட்டன், ஃபிஷ் என அமர்க்களம் படுத்தியுள்ளார்கள் அப்பொழுது ராகினியை சாப்பிட கூப்பிடுகிறார்கள் ஆனால் ராகினி தன்னுடைய அம்மா என்ன செய்கிறார் அவர் சாப்பிட்டாரா இல்லையா என்ற வேதனையுடன் ஒக்காந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அர்ஜுன் ராகினியை சாப்பிட கூப்பிடவில்லையா என கேட்க நான் எவ்வளவோ கூப்டேன் அவ வரல என கூறுகிறார் அர்ஜுனின் அம்மா.
உடனே அர்ஜுன் ராகினி இடம் சென்று வா சாப்பிடலாம் என அழைக்கிறார் அதற்கு நான் ஏதாவது தப்பு செஞ்சுட்டேனா என அர்ஜுனை பார்த்து ராகினி கேட்க அதெல்லாம் ஒரு தப்பும் கிடையாது அவங்கள தானே வீட்டை விட்டு போனாங்க கண்டிப்பா அவங்களே வருவாங்க என பேசுகிறார் இந்த சமயத்தில் அர்ஜுனின் குடும்பம் இந்த மாதிரி நேரத்துல கூடவே இருந்து குழந்தையும் உன்னையும் பார்த்துக்கணும் அவங்களே அதை பத்தி கவலைப்படாம போயிட்டாங்க நீ ஏன் கவலைப்படுற என்பது போல ஏத்தி விடுகிறார்.
பிறகு ராகினி சாப்பிடுவதற்கு போகிறார் அந்த பக்கம் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் தமிழ் அனைத்து பொருளும் வாங்கி விட்டு வந்து விட்டேன் என கூறுகிறார் உடனே சாப்பாடு ரெடி ஆகிறது அனைவரும் சாப்பிட உட்கார்கிறார்கள் ஆனால் தட்டு இரண்டு மூன்று தான் இருக்கிறது அதனால் நீங்கள் ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க அப்புறம் நாங்க சாப்பிட்டுக் கொள்கிறோம் என கூற பரவால்ல நீங்க சாப்பிடுங்க நானும் அத்தையும் அப்புறமா சாப்பிட்டு கொள்கிறோம் நடேசன் கூறுகிறார்.
உடனே நமச்சி இப்ப என்ன எல்லாரும் ஒன்னா சாப்பிடணும் அவ்வளவு தானே சரஸ்வதி நீ தான் முன்னாடி நம்ம இங்க புதுசா வந்தப்ப எல்லாருக்கும் உருண்டை பிடிச்சு கொடுத்தில்ல அதே போல் உருண்டை பிடிச்சு கொடு என நமச்சிக் கூற உடனே நடேசன் இது நல்ல ஐடியாவா இருக்கே கோதை நீயே எல்லாருக்கும் சின்ன வயசுல உருண்டை பிடிச்சு கொடுத்த மாதிரி நிலா சோறு ஊட்டு என கூறுகிறார் உடனே கோதையும் ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டு பிசைந்து ஒரு ஒருவருக்காக கொடுக்கிறார்.
கடைசியாக தமிழ் இடம் கையை நீட்டுகிறார் ஆனால் தமிழ் ஏதோ ஒரு யோசனையில் வாங்காமல் இருக்கிறார் அந்த சமயத்தில் சரஸ்வதி தமிழ் வாங்குங்க என கூற உடனே வாங்கி சாப்பிட ஆரம்பிக்கிறார் அந்த சமயத்தில் கார்த்தி சாப்பாட்டை கையில் வைத்துக்கொண்டு அழுகிறார் என்னால்தான் எல்லா பிரச்சனையும் நான் தான் உங்களை நம்பாமல் அந்த அர்ஜுன் சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டிட்டேன் அதுதான் பெரிய தப்பா போயிடுச்சு என அழுகிறார்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல போனது போயிடுச்சு இனிமே நிம்மதியா இருக்கலாம் என்பது போல் தமிழ் பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் யாரும் எதுக்கும் வருத்தப்பட தேவையில்லை பழச எதையும் யோசிக்காமல் எல்லாரும் சாப்பிடலாம் சந்தோஷமா இருக்கலாம் எனக்கு கூறுகிறார். பிறகு அடுத்த காட்சியில் ராகினி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது இந்த பாலையாவது குடி என அர்ஜுனன் அம்மா கேட்க என்ன கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுறீங்களா என கத்துகிறார்.
அந்த சமயத்தில் அர்ஜுன் வெளியில் இருந்து வரும் பொழுது அவரிடம் ராகினி எதையும் சாப்பிடாமல் இருக்கிறார் அவ இப்படியே இருந்தா குழந்தைக்கு நல்லது இல்லை என்பது போல் கூற உடனே அர்ஜுன் மாமா அந்த வெடியை மாடிக்கு எடுத்துக்கிட்டு போங்க கேக்கை எடுத்துட்டு போங்க நான் ராகினியை கூட்டிட்டு வரேன் என கூறுகிறார் அர்ஜுன் ராகினியை கூப்பிட சென்றார் அப்பொழுது ராகினி நாம எந்த தப்பும் செய்யல நம்முடைய திருமண நாள் இன்னைக்கு அதனால கண்டிப்பா செலிப்ரேட் பண்ணி ஆகணும் என பேசுகிறார்.
அதான் அந்த நாளை முடிந்துவிட்டது என ராகினி கூற நீ வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என மாடிக்கு அழைத்து செல்கிறார் அப்பொழுது அங்கு அர்ஜுனின் மாமா பாட்டாசு கொளுத்தி வெடிக்கிறார் ஏதோ சத்தம் கேட்கிறது என தமிழ் வீட்டிலிருந்து அனைவரும் எட்டி பார்க்கிறார்கள் அங்கு பட்டாசு வெடிப்பதை பார்த்த தமிழ் கடுப்பில் இருக்கிறார். எல்லாரும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறான் பார் என நமச்சி கூறுகிறார்.
அந்த பக்கம் அர்ஜுன் மாமா இப்ப எல்லாரும் அங்கிருந்து பார்த்துட்டு இருப்பாங்க இல்ல வயிறு எரியும் இல்ல என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதற்காக தான் இங்கு வந்து பட்டாசு வெடிக்கிறேன் என அர்ஜுன் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.