Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் சொத்தை எழுதி வாங்கி கொண்டு வீட்டை விட்டு துரத்தியதால் அனைவரும் கோவிலில் இருக்கிறார்கள். அப்பொழுது தமிழ் அங்கு வந்து எதற்காக இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள் வீட்டுக்கு வர வேண்டியதுதானே என பேசுகிறார் அதற்கு கார்த்தி இல்லனா நாங்க எப்படி அங்க வர்றது நாங்க ஏதாவது ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிக்கிறோம் எனக் கூற அதற்கு தமிழ் சின்ன வீடா இருக்குன்னு யோசிக்கிறியாடா என தமிழ் கேட்கிறார்.
அப்படிலாம் இல்லன்னு நான் உங்களை நம்பாமல் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் என பேச அதற்கு தமிழ் அதெல்லாம் விடு பழசு எல்லாம் விட்டுடு வா போகலாம் என கூப்பிடுகிறார். உடனே என்னப்பா இவன் இப்படி பேசிட்டு இருக்கான் என நடேசன்னை பார்த்து தமிழ் கேட்கிறார் ஒரு வழியாக அனைவரும் தமிழ் வீட்டுக்கு வருவதற்கு சம்மதிக்கிறார்கள் ஆனால் கோதை மட்டும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது தமிழ் எனக்கு வந்த கோபத்துக்கு அவனை போய் இரண்டு மிதி மிதிச்சிட்டு தான் வந்தேன் என கூறுகிறார்.
அதற்கு நமச்சி என்னையும் கூப்பிட வேண்டியது தானே நானும் ரெண்டு அடி அடிச்சிருப்பேன் என பேசுகிறார். அனைவரும் கிளம்ப கோதை மட்டும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது நடேசன் நீங்க போங்க நான் கூப்பிட்டு கொண்டு வருகிறேன் என பேசுகிறார் நடேசன் இடம் கோதை நான் எப்படி தமிழ் மூஞ்சில முழிக்கவே என்னால முடியல நான் ஒரு அம்மாவா எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு இப்ப எப்படி நான் அந்த வீட்டுக்கு போக முடியும் என பேசுகிறார்.
உடனே நடேசன் முன்னாடி நம்ம தான் வீட்டை விட்டு அனுப்பினோம் இப்ப வீட்டுக்கு போகலன்னா தமிழ் தான் வீட்டுக்குள்ளே சேர்த்துக்கலாம்னு தமிழ் மேலே தான் பழி விழும் அந்த பழியை அவனுக்கு வேண்டாம் நம்மளால நிறைய கஷ்டப்பட்டுட்டான். இதுக்கு மேலயும் அவன் கஷ்டப்பட வேண்டாம் வா போகலாம் என கூப்பிடுகிறார் கோதையும் கிளம்புகிறார். அனைவரும் தமிழ் வீட்டிற்கு செல்கிறார்கள் அப்பொழுது அனைவரும் அமர இத்தனை நாள் இந்த வீட்ல தான் இவங்க இருந்தாங்களா என கோதை கேட்கிறார்.
அதற்கு நடேசன் ஆமாம் இந்த வீட்லதான் இருந்தாங்க என பேசுகிறார் உடனே குழந்தைக்கு தொட்டில் வாங்கணும் என பேசிக்கொண்டு இருக்க புடவையால் தொட்டில் கட்டிக் கொள்ளலாம் வேணுங்கிறப்ப மாத்திக் கொள்ளலாம் என பேசுகிறார்கள் பிறகு கார்த்தி தமிழிடம் என்ன மன்னிச்சிடு நான் உன்ன நம்பாம விட்டுட்டேன் அண்ணா உன்னை ஏதேதோ பேசிட்டேன் என பேசுகிறார் அதேபோல் வேலைக்கார பெண் அபி நீ ரெண்டு மாசம் உங்க அக்கா வீட்டுக்கு போய் இருக்க வேண்டியதுதானே என நமச்சி கேட்க அதற்கு அபி இவங்கள இந்த நிலைமையில் விட்டுட்டு நான் எப்படி போக முடியும் எனக் கூறுகிறார்.
உடனே நடேசன் நம்ம பெத்து வளர்த்து படிக்க வச்சு நல்லது கெட்டது செஞ்ச ராகினியங்க இந்த பொண்ணு எங்க என ஃபீல் பண்ணுகிறார். தமிழ் அனைவருக்கும் என்னென்ன வேணும் என்பதை வாங்குவதற்காக செல்கிறேன் என கூறுகிறார் அப்பொழுது கார்த்தியை நானும் வருகிறேன் எனக் கூற நீ ரெஸ்ட் எடுடா நானே போய் வாங்கிட்டு வரேன் என பேசுகிறார். அபி அனைவருக்கும் டீ கொடுக்கிறார் அனைவரும் குடிக்கிறார்கள்.
தமிழ் வெளியே செல்வதற்கு முன்பு நான் யாரையும் மறந்து விடல என்ன வேணும்னு சொல்லுங்க என மறைமுகமாக கோதை இடம் கேட்கிறார் பிறகு தமிழ் வெளியே செல்கிறார் சென்ற பிறகு கார்த்தி பாயில் உட்கார்ந்து அழுகிறார். என்னாலதான் இவ்வளவு பிரச்சனையும் நான் கொஞ்சம் ஜாக்கிரைதையா இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது என்பது போல் அழுகிறார். உடனே வசு உன்னால எந்த பிரச்சினையும் கிடையாது அழாத எனக் கூறுகிறார் அந்த சமயத்தில் குழந்தை கத்துகிறது உடனே கோதை குழந்தையை நானே பார்த்துக்கொள்கிறேன் என தொட்டிலை ஆட்டுகிறார். எதோ ஒரு யோசனையில் கோதை இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.