Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல உங்களுக்கு யாருக்குமே உரிமை கிடையாது என அர்ஜுன் வாக்குவாதம் செய்கிறார். அப்பொழுது தன்னுடைய அக்கா கணவரிடம் அந்த டாக்குமெண்ட்டை எடுத்துக் கொண்டு வாங்கள் என கூறுகிறார் அர்ஜுன் உடனே டாகுமெண்டை கார்த்தியிடம் தூக்கி போட்டு நல்லா படிச்சு பாரு இந்த வீடு முழுக்க முழுக்க யாரு பேர்ல இருக்குன்னு என கூறுகிறார்.
கார்த்தியும் படித்துப் பார்த்துவிட்டு அப்பா இந்த வீடு நம்ம சொத்து எல்லாமே ராகினி பெயரில் இருக்குப்பா என கூற நடேசன் அதிர்ச்சி அடைந்து டேய் ராஸ்கல் இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டியே திருட்டுத்தனமா எழுதி வாங்கிட்டியே என அர்ஜுன் சட்டையை பிடிக்கிறார் உடனே ராகினி நடேசன் கையை தட்டி விட்டு அவர் என்ன தப்பு செஞ்சாரு அவங்க கம்பெனியை வைத்து தானே இவ்வளவு தூரம் வளந்திங்க அதைதானே எழுதி வாங்கி இருக்காங்க என வக்காலத்து வாங்குகிறார் ராகினி.
இதெல்லாம் போக ராகினி உங்களுக்கு பொறந்தது நினைச்சு நான் கேவலப்படுறேன் என பேச கோதை கண்களில் கண்ணீர் கலங்குகிறது. உடனே உங்களுக்கு என்னோட சொத்து தானே முக்கியம் எல்லாத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் நான் யாரையும் வெளிய போக சொல்லல எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருக்கலாம் என பேச அதற்கு ராகினியும் அவர்தான் சொல்றார் இல்ல யாரையும் அவர் வெளியில் அனுப்ப மாட்டாரு எல்லாரும் இங்கே இருக்கலாம் என பேசுகிறார் ராகினி.
உடனே உனக்கு கிறுக்கு பிடிச்சிருச்சா ரொம்ப தான் அவனை நம்பிட்டு இருக்க ஒரு நாள் நீயும் என்னை மாதிரி நடுத்தெருவுக்கு வருவ அப்பதான் உனக்கு புரியும் எங்களுடைய வலியும் வேதனையும் என்பது போல் கூறிவிட்டு கோதை வெளியே செல்கிறார். வெளியே சென்ற கோதை நேரடியாக கோவிலுக்கு செல்கிறார் அப்பொழுது அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த வேலைக்கார பெண் என்னை மறந்துட்டீங்களா இந்தாங்க குழந்தையோட எல்லா டிரஸ் எடுத்துட்டு வந்துட்டேன் என கொடுக்கிறார்.
அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்பொழுது நீக்கப்பட்டு அவருக்கு பதில் வேறொருவர் நடித்து வருகிறார் இவர் நமச்சி அவர்களின் காதலி. இவர திடீர்னு மாற்றப்பட்டுள்ளதால் நமச்சி காதல் அவ்வளவுதானா என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஆபி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் அந்த அளவு பொருத்தமாக நடிப்பாரா என்பது தெரியவில்லை.
இவருக்கு பதில் இனி இவர்தான் என தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அறிவித்து விட்டார்கள்.