Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்டில் சரஸ்வதியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்துள்ளார் தமிழ் அப்பொழுது செக்கப்புக்காக உள்ளே சென்றுள்ளார் அந்த சமயத்தில் தமிழை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் தமிழ் பதட்டத்தில் இருந்ததால் கோதை அவருக்கு ஆறுதல் கூறுகிறார். உடனே தமிழ் அதனை ஏற்றுக்கொள்கிறார். சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வருகிறார்கள்.
டாக்டர் வந்து சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது உறுதியாக கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் 5 வாரங்கள் ஆகிவிட்டது எனவும் கூறுகிறார். ஆனால் என க்கு வைத்து டாக்டர் பேசுகிறார் அதாவது சரஸ்வதியின் கர்ப்பப்பை மிகவும் வீக்காக இருப்பதாகவும் அதனால் மாடிப்படி ஏறக்கூடாது வேகமாக நடக்கக்கூடாது வைட் தூக்கக்கூடாது என பல கண்டிஷன்களை கூறுகிறார் அதற்கு தமிழ் எந்த வேலையும் செய்ய விட மாட்டான் நானே பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறுகிறார்.
அதற்கு வசு மற்றும் கோதை நாங்க பாத்துக்க மாட்டோமா எனக் கூறுகிறார். மற்றொரு பக்கம் அர்ஜுன் தமிழ் அடி வாங்க வேண்டியது மிஸ் ஆகிடுச்சு என புலம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது அதேபோல் அந்த அர்ஜுன் குடும்பம் உட்கார்ந்து அவ சும்மா மயங்கி விழுந்திருக்கலாம் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது அபி ஓடி வந்து ராகிணியை கூப்பிட்டு சரஸ்வதி கர்ப்பமாக இருப்பதை டாக்டர் உறுதி செய்து விட்டார்கள் என கூறுகிறார் உடனே அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சியாகிறது.
அதேபோல் மற்றொரு பக்கம் தமிழ் அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார் அப்படியே கோதைக்கு நடேசன் கொடுக்க சொல்கிறார் கோதைக்கு தமிழ் ஸ்வீட் கொடுக்க கோதை சந்தோஷத்துடன் எடுத்துக் கொள்கிறார். இப்படி தமிழ் குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது. ஆனால் அர்ஜுன் தமிழை பழிவாங்க முடியாமல் போனதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்.
உடனே அர்ஜுனின் மாமா ரவுடிகளை வைத்து வீடு போய் அடிக்க சொல்லலாம் என கூற அதற்கு அர்ஜுன் உங்களுக்கு என்ன பைத்தியமா வீடு போய் அடிச்சா நம்ப தான் மாட்டுவோம் பொது இடத்தில் அடித்தால் தான் நாம் மாட்ட மாட்டோம் என கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் நேரம் பார்த்து நான் தமிழை கண்டிப்பா பழிக்கு பழி வாங்குவேன் என அர்ஜுன் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.