Thamizhum saraswathiyum september 21 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு போலீசை அழைத்து வந்துள்ளார் அதேபோல் சரஸ்வதி திடீரென மயங்கி விழுந்து கர்ப்பத்தை உறுதி செய்கிறார்கள்.
தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ரவுடிகளை வைத்து தமிழை போலந்து கட்ட திட்டம் போடுகிறார் அதற்காக நாலு ரவுடிகளை செட் செய்து வைத்துள்ளார். இந்த சமயத்தில் கோதை, சரஸ்வதி, வசு மூவரும் கோவிலுக்கு வருகிறார்கள் அவர்களை அர்ஜுன் வரவேற்க நான் உனக்காக வரல என்னோட பொண்ணுக்காக வந்தேன் என கோதை பதிலடி கொடுக்கிறார்.
பிறகு நலுங்கு வைக்கும் இடத்திற்கு அனைவரும் செல்கிறார்கள் அந்த சமயத்தில் தமிழ் அங்கு வந்து இறங்குகிறார். அர்ஜுன் செட் பண்னிய ரவுடிகள் தமிழை அடிப்பதற்காக, இந்த நேரத்தில் போலீஸ் வந்து இறங்குகிறது. உடனே அர்ஜுன் செட் பண்ணி ரவுடிகள் ஓட்டம் எடுக்கிறார்கள். போலீஸ் நலுங்கு வைக்கும் இடத்திற்கு வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் முகத்தில் மரண பயம் தெரிகிறது அது மட்டுமில்லாமல் அர்ஜுன் குடும்பமும் பயத்தில் நிற்கிறது உடனே வாங்க மேடம் என வசு அழைக்கிறார்.
வசு போலீசை வரவழைத்ததற்கு காரணம் அர்ஜுன் தன்னுடைய குடும்பத்தை தனியாக அழைத்துள்ளதால் ஒரு முன்னெச்சரிக்கையாக தான் வசு இந்த ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அர்ஜுன் குடும்பம் நம்மளை தான் அரஸ்ட் செய்ய வந்திருக்கிறார்கள் என பதட்டத்தில் இருக்கிறார்கள். பிறகு அந்த இன்ஸ்பெக்டரை கோதையிடம் அறிமுகம் படுத்தி வைக்கிறார் வசு.
உடனே நலுங்கு வைக்க அனைவரும் ரெடி செய்கிறார்கள். கோதை வசு சரஸ்வதி மூவரும் நலுங்கு வைக்கப் போகிறார்கள். அந்த சமயத்தில் அர்ஜுனின் அம்மா நில்லு நீ நலுங்க வைக்க கூடாது உனக்கு இன்னும் குழந்தை பிறக்கல என மூஞ்சில அடித்தது போல் கூறுகிறார். உடனே வசு நீங்களே இப்படி சொல்லலாமா என அர்ஜுனின் அக்காவை பார்த்து கூற நான் நலுங்கு வைக்க போறதில்லை பெரியவங்க தான் வைக்கிறாங்க என்பது போல் கூறி விடுகிறார்.
சரஸ்வதி நலுங்கு வைக்கவில்லை என்றால் நானும் வைக்க மாட்டேன் என கோதை கூறுகிறார் உடனே என்னம்மா நீ இப்படி பேசுற என அர்ஜுனின் அம்மாவிடம் அவங்களும் வைக்கட்டும் எனக் கூறுகிறார். ஆனால் நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது என்பது போல் அவர் அகட்டி பேசுகிறார். பிறகு தமிழ் நமச்சி நடேசன் அனைவரும் அங்கு வந்து விடுகிறார்கள் இதற்காக தான் இவன் வர சொல்லி இருக்கான் அவமானப் படுத்துவதற்காக தான் அர்ஜுன் வர சொல்லி இருக்கான் என்பது போல் கூறுகிறார்கள்.
ஆனாலும் நலுங்க வைக்க சரஸ்வதி போவதால் அவரை பிடித்து தள்ளி விடுகிறார் அர்ஜுனன் அக்கா அதில் சரஸ்வதி மயங்கி விழுகிறார் உடனே ஒரு பாட்டி அவரே செக் பண்ணுகிறார் அவருக்கு குழந்தை உருவாகிவிட்டதை உறுதி செய்கிறார் உடனே அனைவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். அர்ஜுனுக்கும் அர்ஜுன் குடும்பத்தினருக்கும் மூஞ்சில் ஈ ஆட வில்லை அனைவரும் காண்டில் இருக்கிறார்கள்.
சரஸ்வதி எழுந்தவுடன் நீ கர்மமா இருக்கிராய் என தமிழ் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் குடும்பத்தாரிடம் மூஞ்சில் அடித்தது போல் இப்ப என் மருமகள் நலுங்கு வைக்கலாம் தானே என கெத்தாக கோதை கூறிவிட்டு அனைவரும் நலங்கு வைக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.