Thamzihum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனன் அம்மா நீங்க அடி வாங்குனது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல நம்ம கிட்ட பணம் எல்லாமே இருக்கு ஆனா இப்ப போய் அடி வாங்கிட்டு வரீங்களே நம்ம நினைச்சா அவுங்களை என்ன வேணாலும் பண்ணலாம் அவங்க கிட்ட ஒன்னுமே இல்லையே என பேச, உடனே அர்ஜுன் எல்லாரும் நிறுத்துறீங்களா உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா ராகினி சொல்ற மாதிரி போலீஸ்ல கேஸ் கொடுத்தா நானும் தான் உள்ள போகணும் ஏன்னா மாமா கோதையை பத்தி தப்பா பேசினாதால் தான் தமிழ் அடிச்சது அதனால இந்த விஷயத்தை இதோட விடுங்க ஏன்னா நான் வாங்குன அடிக்கு கண்டிப்பா பதில் அடி கொடுப்பேன் என அர்ஜுன் பேசுகிறார்.
அடுத்த காட்சியில் அனைவரும் சாப்பிட உட்கார்கிறார்கள் அந்த சமயத்தில் நடேசன் நீ அர்ஜுன் மேல கைய வெச்சி இருக்க கூடாது அவன் வேணும்னே நம்மளை சீண்டி பார்க்கிறான் நாம என்ன செய்யறது என நடேசன் பேச இருந்தாலும் உன் கோபத்தை இன்னும் கண்ட்ரோல் பண்ணிக்கணும் என கூறுகிறார், அதற்கு தமிழும் சரிப்பா என கூறி விடுகிறார். உடனே நமச்சி நீங்க என்னப்பா அவனுக்கு சாதகமா பேசுறீங்க தமிழ் எதனால தெரியுமா அவனை அடிச்சான் அவன் கோதை அம்மாவை பத்தி தப்பா பேசினான் அதனால தான் அடிச்சான் என பேச அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அம்மா பற்றி என்ன தப்பா பேசினான் என அனைவரும் கேட்க உடனே நடந்த அனைத்தையும் நமச்சி கூறுகிறார்.
உடனே அனைவரும் அர்ஜுனனை திட்டுகிறார்கள் அடுத்த நாள் காலையில் அனைத்து வேலைகளையும் கோதை செய்துள்ளார் அப்பொழுது நீங்க ஏன் அத்தை இதெல்லாம் செய்றீங்க என சரஸ்வதி கேட்க ஏன் நான் செய்யக்கூடாதா இதெல்லாம் எனக்கு தெரியும் கொஞ்ச நாள் இடையில செய்யல அவ்ளோதான் எனக் கூற மாவு ரெடி பண்ணி வச்சுட்டேன் எழுந்தவுடன் தோசை ஊத்தி கொடுத்திடலாம் என அனைவருக்கும் காபி போட்டு கொடுக்கிறார் காபியை குடித்துவிட்டு அனைவரும் புகழுகிறார்கள்.
அடுத்த காட்சியில் அபி ராகினி இடம் பேசும்பொழுது அம்மா உன்னை நினைச்சு ரொம்ப பீல் பண்றாங்க ஒரு வார்த்தை பேச வேண்டியதுதானே என ராகினியிடம் அபி கூற அதற்கு அவங்க தானே என்ன விட்டுட்டு போனாங்க அதும் இல்லாம அர்ஜுன அடிச்சிருக்காங்க என பேச சும்மா ஒன்னும் தமிழ் அண்ணன் அர்ஜுன அடிக்கல அவங்க பேசிய பேச்சுக்கு தான் தமிழ் அண்ணன் அடிச்சாரு எனக் கூறுகிறார்.
அப்படி என்ன பேசினாங்க என கேட்க ஆமா கோதை அம்மாவை பத்தி தப்பா பேசினாங்க அதனால தான் ரெண்டு வாங்குனாரு எனக் கூற உடனே அதிர்ச்சி அடைந்து ராகினி அர்ஜுனிடம் சென்று அம்மா பத்தி நீங்க என்ன தப்பா பேசுறீங்க என கேட்கிறார் அதற்கு நான் ஒன்னும் தப்பா பேசலையே என மழுப்ப உடனே அர்ஜுனின் மாமா அர்ஜுன் பேசல நான்தான் பேசினேன் ஆனலப்பட்ட கோதையவே ஓட விட்டுட்டேன் நீங்க எல்லாம் எம்மாத்திரம் என பேசினேன் என கூறுகிறார்.
அதனால்தான் தமிழ் அண்ணா அடிச்சிருக்காரு என கூறுகிறார் உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என திட்டுகிறார் இதனால் ராகினிக்கு ஒவ்வொரு விஷயமாக தெரிய வரப்போகிறது அர்ஜுனன் நிலைமை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.