Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி வாக்கிங் நடந்து வந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது தமிழ் மற்றும் நமச்சி இருவரும் வண்டியில் வருகிறார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நமச்சி இப்ப உனக்கு சந்தோஷமா புது பணக்காரியா மாறிட்ட இல்ல பெத்த அப்பா அம்மாவையே துரத்தி விட்டுட்டல்ல என வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் உன் புருஷனை கத்தியால குத்தவே இல்ல ஆனா நீ பொறக்க போற குழந்தையை கூட சாபம் விட்ட கொலைகார குழந்தைன்னு சொன்ன இப்ப தமிழ் கத்தியால உன் புருஷனை குத்தல ன்னும் உன் புருஷன் தான் ஆள வைத்து தானே குத்திக்கிட்டான்னு தெரிஞ்சுடுச்சுல்ல இப்ப உன் முகத்தை எங்க கொண்டு வசிப்ப என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் இப்ப கூட தமிழ் தான் உன்னை காப்பாற்றினார் அன்னைக்கு ஹாஸ்பிடல்லையும் தமிழ் தான் உன்னை காப்பாற்றினார் அந்த நன்றி விசுவாசம் கூட உனக்கு இல்லையே நீ எல்லாம் டாக்டர் படித்து என்னத்த தெரிஞ்சுகிட்ட போயும் போயும் ஒரு கெட்டவன நம்புறியே என பேசிவிட்டு செல்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ராகினி வயிற்றில் கிரிக்கெட் பால் அடிக்க வந்ததை தமிழ் பிடித்து விடுகிறார் அதையும் நமச்சி இப்ப கூட உன்னை தமிழ் தான் காப்பாற்றினார் என கூறிவிட்டு செல்கிறார். மற்றொரு பக்கம் சரஸ்வதி அனைவருக்கும் தோசை சுட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நடேசன் இடம் தோசை கொடுக்கும் பொழுது அந்த வீட்டில் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு இன்னொரு தோசை கொண்டு வா என கூறுகிறார்.
அனைவரும் கையில் வைத்து கொண்டு சாப்பிடுவது போல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது தமிழிடம் சொல்லி டைனிங் டேபிள் ரெடி பண்ணுகிறேன் என கூறுகிறார் அதற்கு அதெல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது நாங்க நல்லா தான் இருக்கும் என நடேசன் மற்றும் கோதை கூறுகிறார் நடேசன் யாரை மன்னித்தாலும் மன்னிப்பார் ராகினியை மட்டும் மன்னிக்க மாட்டேன் அவளுக்கு அவன் தான் முக்கியமா போச்சா என பேச அதற்கு சரஸ்வதி அவ என்ன பண்ணுவா அந்த அர்ஜுன் அவள நம்புற மாதிரி கதை சொல்லி வச்சிருக்கான் என கூறுகிறார்.
அப்பொழுது நமச்சி மற்றும் தமிழ் இருவரும் வந்து ராகினியை பார்த்ததை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ராகினி கண்கலங்கினார் என நமச்சி கூறுகிறார் அடுத்த காட்சிகள் ராகினி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா போதும் உலகத்துல எந்த பிரச்சனையும் இருக்காது சொத்த மொத்தமா எழுதி வாங்கிட்டு அம்மா அப்பாவை விரட்டி விட்டுட்டியே என நாலு பேரு நாலு விதமா பேசிக் கொண்டே போகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு பேர் இந்த பொண்ணு தான் அவளா இவ பாவம் எல்லாம் குழந்தையை வந்து சேரும்னு இவளுக்கு தெரியாதா என பேசிக்கொண்டு போகிறார்கள்.
நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது அபியை ராகினி பார்க்கிறார் கூப்பிட்டும் ஏன் பேசாம போற என கேட்க உன்கிட்ட என்னத்த பேசுறது அப்பா அம்மாவையே வெளியில் துரத்திட்ட நீயேன் அங்கிருந்து கஷ்டப்படுற நீ இங்க வந்திட வேண்டியதுதானே என ராகினி கூற அதற்க்கு அபி அப்பா அம்மா எங்க இருக்காங்களோ அங்க தான் நானும் இருப்பேன் என முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் தமிழ் புதிய வீடு பார்ப்பதற்காக புரோக்கரை வர சொல்லி இருந்தார் அப்பொழுது அவர் வந்து புதிய வீடை பற்றி பேசிக் கொண்டிருக்க உடனே கோதை அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல எல்லாம் ஒன்னா இருக்கலாம் என்று தானே கூப்பிட்டீங்க அப்புறம் எதுக்கு எங்கள மட்டும் தனியா போக சொல்றீங்க என பேசுகிறார்.
வீடுவசதியா இருந்தா சந்தோஷமா எல்லாம் இருந்திட முடியுமா புடிச்ச உங்களோடு இருந்தா தான் சந்தோஷமா இருக்க முடியும் நான் என் மகனோட இருக்குறது தான் சந்தோஷம் நினைக்கிறேன் என கோதை கூறுகிறார் தமிழ் மனது இப்பொழுது குளிர்கிறது. அடுத்த காட்சியில் அபி ராகினியை பார்த்ததை கூறுகிறார் அப்பொழுது கோதை அவ பாவம் ரொம்ப கஷ்டப்படுறா போல என பேச சரஸ்வதியும் அதையே கூறுகிறார்.
மேலும் கார்த்தி மற்றும் நடேசன் இருவரும் வக்கீலை பார்க்க செல்கிறார்கள் அப்பொழுது வக்கீல் நீங்க எப்படி இவ்ளோ கேரளாஸா இருந்தீங்க எல்லாத்தையும் எழுதி கொடுத்த மாதிரி அவன் அழகா செட்டப் பண்ணி எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டானே இப்ப எதுவுமே செய்ய முடியாதா என நடேசன் கேட்க அதற்கு வக்கீல் இது ரொம்ப காம்ப்ளிகேட்டான கேஸ் யார் பக்கம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது 90 நாள் குள்ள நம்ம கேஸ் பைல் பண்ணனும் என கூற உடனே நான் அதற்கான வேலையை பார்க்கிறேன் நீங்கதான் எல்லாரும் கையெழுத்து போட்டு விட்டீர்களே என கூற இன்னும் என் அண்ணன் தமிழ் கையெழுத்து போடல என கார்த்தி கூறுகிறார் இந்த ஒரே ஒரு பிளஸ் தான் நம்ம கிட்ட இருக்கு முடிஞ்ச அளவு ட்ரை பண்ணுவோம் என கூறுகிறார் வக்கீல்.
பிறகு நடேசன் மற்றும் கார்த்தி இருவரும் வீட்டிற்கு செல்கிறார்கள் அப்பொழுது போன காரியம் என்னாச்சு என கோதை கேட்க அதற்கு நடேசன் ரொம்ப கஷ்டம் தான் முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்னு சொல்லி இருக்காரு என பேசுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.