Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் கம்பெனியில் பரமு ஒரு தொழிலாளியை அடித்ததால் அது பூதகாரமாக வெடிக்கிறது . உடனே தொழிலாளியை கூப்பிட்டு பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என கூறுகிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் தொழிலாளி இடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள் என கூறுகிறார். உடனே நான் எப்படி கேட்கிறது எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு எனக் கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கு மன்னிப்பு மட்டும் கேளுங்க எனக் கூறுகிறார்.
அர்ஜுனனின் மாமா தொழிலாளிடம் மன்னிப்பு கேட்கிறார் ஆனால் தொழிலாளிகள் இது சரிவராது என கூறுகிறார். பதிலுக்கு நானும் அவரை அடிக்க வேண்டும் நான் அடிச்சுட்டு மன்னிப்பு கேட்கிறேன் என தொழிலாளிகள் கூறுகிறார்கள். அதற்கு அர்ஜுன் அதான் மன்னிப்பு கேட்டுட்டாரு இல்ல அது எப்படி அடிக்க முடியும் அப்படி எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறார்.
அப்படி ஒன்னும் நீங்க வேலை செய்யணும்னு அவசியம் கிடையாது, போறதா இருந்தா வெளிய போங்க என அர்ஜுன் கூறுகிறார் அனைவரும் வெளியே கிளம்புகிறார்கள் இங்க வேலை செய்யறதுக்கு வேலை செய்யாமலே இருக்கலாம் என அனைத்து தொழிலாளர்களும் கிளம்புகிறார்கள். அடுத்த காட்சியில் அர்ஜுன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சாப்பிட அழைக்கிறார்கள் ஆனால் அந்த சமயத்தில் பரமன் ஓடி வந்து அந்த தமிழ் செஞ்ச வேலையை பார்த்தீர்களா என மொத்த பழியையும் தமிழ் மீது தூக்கி போடுகிறார்கள்.
ராகினி ஏதாவது கேப்பார் என்பதற்காக தான் தமிழ் மீது பழி போடுகிறார்கள். உடனே வெளியே வந்து தமிழ் கம்பெனியை சோலியை முடிக்க ஆல் ரெடி பண்ணு என கூறுகிறார். இதனை அபி கேட்டு விட்டு உள்ளே செல்கிறார். அந்தபக்கம் அர்ஜுன் கம்பெனி விட்டு வெளியே சென்ற தொழிலாளிகள் அனைவரும் தமிழ் கம்பெனிக்கு போய் வேலை கேட்கிறார்கள் கார்த்தி வேண்டாம் என கூற பிறகு தமிழ் அனைவரையும் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார் அனைவரும் திறமையான வேலைக்காரர்கள் அதனால் சேர்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.
பிறகு கோதை நடேசன் அவர்களிடம் நடந்த விஷயத்தை கூறிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அதனால் கோதை பதட்டத்தில் இருக்கிறார் அவன் ஏதாவது செய்வான் அவன் கிரிமினல் என கூற அது மட்டும் இல்லாமல் ராகினியிடம் தமிழ் தான் வேணும்னே செஞ்சது போல் கதை கட்டி வைத்திருப்பான் என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உடனே அபி கால் செய்து தமிழ் அண்ணனை ஏதாவது செய்ய அர்ஜுன் திட்டம் போட்டுட்டு இருக்கான் அதனால பார்த்து இருந்துக்கோங்க எனக் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் கோதை தூங்கி கொண்டிருக்கும் பொழுது வாழைமரம் பற்றி எறிவது போல் கனவு வருகிறது. இதனால் நடுராத்திரியில் திடுதிப்பு என எழுந்து வருகிறார் கோதை, அந்த சமயத்தில் தமிழ் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.