Thamizhum saraswathiyum today episode october 3 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி பைக்கில் ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடலில் இருக்கிறார். அவருக்கு எதுவும் ஆகாது என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கோதை நடேசன் வசூ மூவரும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள் என்னாச்சு என கேட்கிறார்கள் வர வழியில் ஆக்சிடென்ட் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் நமச்சி அந்த சமயத்தில் தமிழ் வருகிறார்.
இந்த நிலைமையில் விட்டுட்டு எங்கடா போன என நடேசன் தமிழை பார்த்து கேட்க அதை அப்புறம் சொல்றேன் பா சரஸ்வதிக்கு என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே இன்னும் டாக்டர் வரவில்லை என கூறிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் வந்த நர்ஸ் சரஸ்வதிக்கு என்னாச்சு என கேட்க டாக்டர் வந்து கூறுவார் என கூறுகிறார். வெளிய வந்த டாக்டர் சரஸ்வதிக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது எனக் கூறுகிறார் உடனே அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
சரஸ்வதியை இப்பொழுது பார்க்கலாமா என தமிழ் கேட்க தாராளமாக பார்க்கலாம் என கூறுகிறார் டாக்டர். சரஸ்வதி அனைவரும் பார்க்கும் பொழுது உடனே நீ கொஞ்சம் பார்த்து வந்திருக்கக் கூடாதா என தமிழை கேள்வி கேட்க நமச்சி இதுக்கெல்லாம் காரணம் அந்த அர்ஜுன்தான்.. அவங்க கம்பெனில வேலை செய்ற செல்வத்தை வச்சு தான் இந்த மாதிரி ஏதோ பண்ணி இருக்கான் என நமச்சி கூறுகிறார்.
அந்த ராஸ்கல் இவ்வளவு தூரம் துணிஞ்சுட்டானா என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவனெல்லாம் சும்மாவே விட கூடாது என பேசிக்கொண்டு இருக்க அவனை போய் அடிச்சிட்டு தான் வரேன். சரஸ்வதிக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆயிருந்தா என் கையாலே அவனை கொன்னு போட்டு இருப்பேன் என பேசிக்கொண்டு இருக்கிறார் தமிழ்.
அனைவரும் புது வீட்டிற்கு வந்து பால் காய்ச்ச ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அவனுக்கு எங்கையாவது கொஞ்சமா வது அறிவு இருக்கா நம்ம வீட்ல கர்ப்பமான பெண் இருக்கா அதெல்லாம் யோசிக்காம ஒரு பெண்ணோட கருவ அழிக்கிறதுக்கு துடிக்கிறானே அவன்லாம் மனுசனா மிருகம் எனக்கோதை திட்டிக் கொண்டிருக்கிறார் உடனே நடேசன் போலீசில் கம்ப்ளைன்ட் செய்யலாம் என கூற.
அவன் தான் இல்லன்னு சாதிச்சுட்டு இருக்கானே நம்மகிட்ட சரியான எவிடன்ஸ் கிடையாது அதனால் நிரூபிக்க முடியாது என பேசிக் கொண்டிருக்கிறார் தமிழ். பிறகு அனைவரும் யார் யாருக்கு என்ன ரூம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த காட்சியில். சரஸ்வதிக்கு என்ன ஆச்சு என ராகினி சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் வா சாப்பிடலாம் என அர்ஜுனன் அக்கா கூப்பிட எனக்கு சாப்பாடு வேண்டாம் என கூறுகிறார்.
உடனே அர்ஜுன் வா ராகினி சாப்பிடலாம் அவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது என கூறிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் அர்ஜுனனின் மாப்பிள்ளை ஓடி வந்து நம்ம நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டேன் என கூற ராகினிக்கு பெரிய சந்தேகம் வருகிறது என்ன நெனச்சீங்க என்ன நடக்கல என கேட்கிறார். உடனே அது ஒன்னும் இல்லமா நம்ம பயந்த மாதிரி எதுவும் நடக்கல சரஸ்வதி பிழைத்துக்கொண்டால் குழந்தையும் நல்லா இருக்கு நான் இப்பதான் விசாரிச்சிட்டு வரேன் எனக் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அர்ஜுனின் முகம் சோகத்தில் வாடுகிறது.. உடனே ராகினி நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத அர்ஜுன் இந்த விபத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைல என கேட்கிறார் இதனால் அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார். உடனே ஏதேதோ சொல்லி மழுப்புகிறார். அதுமட்டுமில்லாமல் நாம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் சொன்னதே நான்தான் அவங்க தனியா வாடகை வீட்டுக்கு போனது தான் எனக்கு பிடிக்கல மத்தபடி நான் ஏன் இந்த மாதிரி காரியத்தை செய்யப் போறேன் என அர்ஜுன் மழுப்புகிறார்.
ராகினியும் அர்ஜுன் பேச்சைக் கேட்டுக் கொண்டு சாரி அர்ஜுன் நான் தப்பா கேட்டு இருந்தா மன்னிச்சிரு என பேசிக்கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.