Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது வசு அந்த கிளைன்ட் கால் பண்ணி கொண்டு இருக்கிறார்கள், வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என கூறுகிறார்கள் அதனால் கார்த்தி ஃபோனை அட்டென்ட் பண்ணாமல் இருக்கிறார் என்ன பண்ணலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்லவேளை தமிழ் அன்னைக்கு ராகினியை பார்த்ததால் தான் காப்பாற்ற முடிஞ்சது ராகினி இப்ப சந்தோஷமா இருக்கா அது போதும் அந்த சந்தோஷத்தை நினைச்சுக்கிட்டாலே நம்ம கஷ்டம் எல்லாம் மறைந்து போகும் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என பேசிக்கொண்டிருக்கும் பொழுது உமாபதி சார் உள்ளே வருகிறார்.
உமாபதி இடம் தமிழ் என்னால் பெங்களூர் போக முடியவில்லை என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உமாபதி உங்களுக்கு எப்படி நடந்துச்சு அதே மாதிரி அந்த கம்பெனி முதலாளிக்கும் அதேபோல் நடந்து விட்டது அவங்களும் ஃபாரின் போகவில்லை பெங்களூரில் தான் இருக்கிறார்கள் நீங்கள் நேரில் போய் சந்தித்தால் இந்த டீலிங் முடித்து விடலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் தமிழ் பெங்களூர் கிளம்புகிறார் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் மேக்னா என்ற கதாபாத்திரம் மிகவும் பிரம்மாண்டமாக காட்டுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் செய்கிற வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று ஆர்டர் போடும் அளவிற்கு இருக்கிறார் வாட்ச்மேன் கதவை திறக்க நேரம் ஆனதால் அவரை வேலையை விட்டு தூக்குகிறார் பிறகு அவரை வேலைக்கார அம்மா மற்றும் மாமா கேட்டுக் கொண்டதால் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார் மீண்டும்.
அதேபோல் அவரின் மாமா மகனுக்கு மேக்னாவிடம் வேலை கேட்க அவர் பஸ்ட் முடியாது என கூறி விடுகிறார் பிறகு அந்த வேலைக்கார பெண் ரெக்வஸ்ட் வைத்து கேட்டுக் கொள்வதால் ஒரு வாய்ப்பு தருகிறார் இப்படி மிகவும் டெரராக காண்பிக்கப்படும் மேக்னா பெங்களூரில் கிளைண்டு அனுப்புவதற்காக ஏர்போர்ட் செல்கிறார் அங்குதான் தமிழ் நமச்சி இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது எதிர்பாராத விதமாக நமச்சி மேக்னாவை இடித்து விடுகிறார் அதனால் அவரை ஓங்கி அரைக்கிறார் மேக்னா.
இதனால் கோபப்பட்ட தமிழ் நமச்சி இடம் மன்னிப்பு கேட்க கூறுகிறார் அதற்கு அந்த மேக்னா நான் யார் தெரியுமா என்னுடைய பேக்ரவுண்ட் என்ன தெரியுமா என பேசிக் கொண்டிருக்க நீ யாரா வேன இரு முதலில் மன்னிப்பு கேளு நான் மூன்று எண்ணுவேன் அதற்குல் மன்னிப்பு கேள் இல்லனா நீ அடிச்சதை விட ரெண்டு மடங்கு கிடைக்கும் எனக் கூற மன்னிப்பு கேட்க மறுக்க மேகனாவை அறைந்து விடுகிறார் தமிழ் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.