Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் ராகினியை காப்பாற்றி ஹாஸ்பிடல் சேர்த்துள்ளார் அந்த சமயத்தில் தமிழ் அர்ஜுனுக்கு கால் பண்ண போகிறார் ஆனால் அங்கு அர்ஜுன் தமிழ் கம்பெனி நடத்த விடாமல் பண்ண வேண்டும் என பிளான் செய்து கொண்டிருக்கிறார். அர்ஜுன் தமிழ் போனை அட்டென்ட் செய்கிறார் அப்பொழுது என்ன சார் என்னோட ஹெல்ப் ஏதாவது தேவையா கடைசில அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்ட தான் ஹெல்ப் கேக்குறீங்க பாத்தீங்களா என பேசுகிறார்.
அதற்கு தமிழ் உன் வாய் கொழுப்பு கொஞ்சம் கூட குறையாதாடா என திட்டுகிறார் உடனே தமிழ் ராகினிக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன வெட்டி போட்டுருவேன் என திட்டுகிறார் ராகினிக்கு என்ன ஆச்சு எனக் கேட்கிறார். உன் மாமா குடிகாரனை நம்பி தான் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைப்பியா ஏன் நீ ஹாஸ்டல் போக முடியாதா சொத்த தான் புடுங்கிட்ட அவள கூட உன்னால பார்த்துக்க முடியாதா என திட்டுகிறார்.
உடனே நடந்த அனைத்தையும் தமிழ் கூற அர்ஜுன் பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் அதுமட்டுமில்லாமல் கோதை நடேசன் என அனைவரும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள் அதே போல் அர்ஜுன் குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அர்ஜுன் வந்ததும் அர்ஜுன் தமிழ் திட்டுகிறார். அதேபோல் அர்ஜுன் குடும்பம் வந்ததும் அனைவரும் திட்டுகிறார்கள் சொத்தை தான் எழுதி வாங்கிக்கிட்டிங்க இவ்வள கூட உங்களால பாத்துக்க முடியாதா பணத்து பிசாசே என திட்டுகிறார்கள்.
சிறிது நேரம் கழித்து டாக்டர் பெண் குழந்தை பிறந்துள்ளது அம்மாவும் மகளும் நல்லா இருக்காங்க எனக் கூற அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் அர்ஜுன் தமிழிடம் சென்று நான் உங்களுக்கு எவ்வளவோ கஷ்டம் கொடுத்து இருக்கேன் ஆனா இந்த சிச்சுவேஷன்ல கூட நீங்க எனக்கு ஹெல்ப் தான் பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி என கை எடுத்து கும்பிடுகிறார்.
அந்த சமயத்தில் அர்ஜுன் மாமா எழுந்து வருகிறார் அப்பொழுது என்ன எல்லாம் எங்கே இருக்கீங்க எல்லாம் செக் பண்ணியாச்சா ராகினிக்கு செக்கப் முடிஞ்சிடுச்சா என கேட்க தமிழ் கோபப்பட்டு அர்ஜுன் மாமாவை வெளுத்து வாங்குகிறார். பிறகு டாக்டர் குழந்தை பிறந்துவிட்டது பெண் குழந்தை எனக் கூறியதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து நர்ஸ் காமிக்கிறார் தமிழிடம் கொடுக்கிறார் தமிழ் பார்த்துவிட்டு குழந்தையின் அப்பா அவர்தான் அவர்கிட்ட காட்டுங்கள் என கூறுகிறார்.
அனைவரும் குழந்தையை கொஞ்சுகிறார்கள் உடனே ராகினி பார்க்கலாம் எனக் கூறியவுடன் அனைவரும் போய் பார்க்கிறார்கள் அப்பொழுது ராகினி கண்ணீர் கலங்கி தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் தமிழிடமும் மன்னிப்பு கேட்கிறார் நான் எவ்வளவோ உங்களை தப்பு தப்பா பேசிட்டேன் ஆனா இப்ப கூட எனக்கு நல்லது தான் செய்றீங்க நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டு இருந்தேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார்.
உடனே அர்ஜுனும் நான் உங்க நிலைமையில இருந்தா கூட நான் செஞ்சி இருப்பனா இல்லையான்னு தெரியல உங்க வேலையை விட்டுட்டு ராகினி தான் முக்கியம்னு காப்பாத்துனீங்க ரொம்ப நன்றி என கையெடுத்து கும்பிடுகிறார். பிறகு அனைவரும் குழந்தையை கொஞ்சுகிறார்கள் ஒருவழியாக அர்ஜுனும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் ஒருவேளை சீரியல் தமிழும் சரஸ்வதியும் இறுதி நிலைக்கு வந்து விட்டதா என்று தோன்றுகிறது. இத்துடன் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட் முடிகிறது.