Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் புது வீட்டிற்கு போவதற்காக அனைத்து பொருட்களையும் வண்டிகளில் ஏற்றி அனுப்புகிறார்கள் அப்பொழுது நமச்சி வந்து எல்லா பொருளையும் அனுப்பியாச்சு நம்ம போக வேண்டிய கார் வந்துருச்சு நம்ம கிளம்பலாமா என கேட்கிறார் உடனே ஏன் எல்லாம் சோகமா இருக்கீங்க என கேட்க பழைய வீட்டை பிரிய மனசு இல்லாமல் சோகமாய் இருக்கிறார்கள் என கூறுகிறார்கள் உடனே நமச்சி அதான் புது வீட்டுக்கு போறோம் இல்ல அங்க தான் எல்லாரும் ஒன்னா தான் இருக்கப் போறோம் என பேசுகிறார்.
அனைவரும் காரில் கிளம்ப தமிழ் சரஸ்வதி நமச்சி மூவரும் பைக்கில் வருகிறார்கள். இந்த சமயத்தில் அர்ஜுன்கம் பெனியில் வேலை செய்யும் செல்வத்தை வைத்து ஒரு நபரை அழைத்து வந்து வண்டியில் தட்டி தூக்க சொல்கிறார் அதானால் சரஸ்வதி கர்ப்பம் கலைய வேண்டும் என கூறுகிறார். தமிழ் சரஸ்வதி பைக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செல்வம் அந்த ரெண்டு பேர் தான் அடிச்சு தூக்கணும் என பேசுகிறார்கள்.
தமிழ் சரஸ்வதி போய்க்கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் வைத்த ஆள் வண்டியில் இடித்து மோதுகிறார். அப்பொழுது நிலை குலைந்து சரஸ்வதி கீழே விழுகிறார். மயங்கி விழுந்த சரஸ்வதி ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள் அப்பொழுது இந்த ஆக்சிடென்ட் நான் தான் காரணம் நான் தான் கேர்ஃபுல்லா வந்திருக்கனும் என தமிழ் கில்டியாக ஃபீல் பண்ணுகிறார் ஆனால் நமச்சி நீ காரணம் கிடையாது அந்த செல்வத்தை அங்கு நான் பார்த்தேன் கண்டிப்பா இது அர்ஜுனோட திட்டமா தான் இருக்கும் இது ஆக்சிடென்ட் கிடையாது அவங்க வேணும்னே பழி வாங்கி இருக்கான் என கூறுகிறார்.
கொலை வெறியில் பைக் சாவியை கொடு என வாங்கிக்கொண்டு அர்ஜுன் வீட்டுக்கு நேராக செல்கிறார் அங்கு அர்ஜுனை கழுத்தை நெரிக்கிறார் அவரின் மாமாவை அடித்ததும்சம் செய்கிறார் ஆனால் ராகினி அர்ஜுன் அம்மா அனைவரும் வந்து காப்பாற்றுகிறார்கள் அப்பொழுது நான் என்ன பண்ணினேன் என கேட்க நீ நடிக்காதடா உன் நடிப்பு எல்லாம் வேற யார்கிட்டயும் வச்சுக்கோ என சொல்லிவிட்டு அடிச்சு தூம்சம் பண்ணுகிறார்.
பிறகு ராகினி கையை பிடித்து இழுக்கும்போது ராகினியிடம் ஏய் நீ இன்னும் இந்த முட்டாள் பயல நம்பிட்டு இருக்கியா நீ தான் இந்த உலகத்திலேயே உன்னை மாதிரி முட்டாள நான் பார்த்ததே இல்லை எனக் கூறுகிறார். ஆளு வச்சி என்ன பழிவாங்குவதாக நினைத்து சரஸ்வதியை கீழ தள்ளிட்ட இல்ல என் சரஸ்வதிக்கும் என் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ கொலைகாரன் கொலைகாரன முன்னாடி சொல்லிருந்த கண்டிப்ப வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என கொலை வெறியில் மிரட்டுகிறார்.
யாரோ பைக்ல வந்து இடிக்கிறதுக்கு நான் என்ன செய்வேன் என கேட்க ராகினிக்கு டவுட் வந்து விடுகிறது அண்ணன் பைக் என்று சொல்லவே இல்ல நீங்க எப்படி பைக்ன்னு சொல்றீங்க எனக்கேட்க அர்ஜுனின் மாமா நான் தான் சொன்னேன் என மழுப்புகிறார். அர்ஜுனை ரூமுக்கு அழைத்துக் கொண்டு சென்று சரஸ்வதி கர்ப்பத்தைதான் கலைப்பதற்கு நீங்க பிளான் போட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சா நான் வேணான்னு சொல்லி இருப்பேன் நம்ப வயுதுலேயே ஒரு புழு பூச்சி இல்லையே என அர்ஜுனன் அக்கா அழுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா சாமியிடம் வேண்டிக் கொள்கிறார்கள் சரஸ்வதி குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என. மேலும் தமிழ் சரஸ்வதி நமச்சி வராமல் இருப்பதால் உடனே போன் செய்து என்னாச்சு என கேட்கிறார் அதற்கு ஆக்சிடென்ட் ஆனதை கூறுகிறார்கள் உடனே அனைவரும் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள் பதறி அடித்து போய் கோதை நடேசன் அனைவரும் செல்ல சரஸ்வதி ஹாஸ்பிடல் மயங்கி கிடக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.