Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் பேங்கில் பணம் கேட்டு விட்டு கிடைக்காததால் வெளியே வருகிறார். அந்த சமயம் அர்ஜுன் வந்து தேவையில்லாத வார்த்தையை விட்டு பேசுகிறார் அப்பொழுது நீங்க பிச்சை எடுக்கிற நிலைமையில தான இப்ப இருக்கீங்க என ஒரு வார்த்தையை விடுகிறார் உடனே நமச்சி ஒழுங்கா ஓடிடு வாங்குன அடி பத்தாதா என பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அர்ஜுன் தமிழ் மாம்ஸ் சூழ்நிலை புரிந்து கொண்ட அமைதியா இருக்காரு நீ எதுக்கு இப்ப ஆடுற பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் நான் சூரியன் மாதிரி ரொம்ப நெருங்க நெனச்சா பீனிக்ஸ் பறவையை எரிச்சிடுவேன் என நக்கலாக பதில் அளிக்கிறார். மேலும் என்ன அத்தை உங்கள ஃபீனிக்ஸ் பறவை சொன்னாங்க என்ன உயர உயர பறக்குதுன்னு சொன்னாங்க என்ன றெக்க உடைஞ்சிடுச்சா என கிண்டல் அடிக்கிறார் உடனே தமிழ் என்ன வெறுப்பேத்துரதா நினைச்சுட்டு ஏதாவது பேசிட்டு இருக்காத எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு தேவையில்லாம ஏதாவது பேசிட்டு என்னை கொலைகாரனா மாத்தாத இப்ப இருக்கிற டென்ஷனுக்கு கண்டிப்பா உன்ன வெட்டி போட்டு விடுவேன் ஒழுங்கா போயிடு என பேசுகிறார்.
அந்த சமயத்தில் நமச்சி அவன் எக்ஸ்பிரஸ் மாதிரி தேவை இல்லாம குறுக்க வந்து நின்னு சிதறிடாத என டயலாக் விட்டு விட்டு செல்கிறார். வீட்டுக்கு போன தமிழ் லோன் கிடைக்கவில்லை என்பதை கூறுகிறார் அந்த சமயத்தில் தொழிலாளிக்கு சம்பளம் போட வேண்டும் அந்த அர்ஜுன் விலைக்கு வாங்க பார்க்கிறான் தொழிலாளியை என பேசிக்கொண்டு இருக்க உடனே பணம் தான ரெடி பண்ணிடலாம் என கோதை கூறுகிறார் அந்த சமயத்தில் அனைவரும் நகைகளை கழட்டி கொடுத்து இதை வைத்து தொழிலாளுக்கு பஸ்ட் சம்பளத்தை கொடு அவர்கள் பட்டினி கடந்தால் நம்ம நல்லா இருக்க மாட்டோம் என பேசுகிறார்.
உடனே கம்பெனிக்கு போகிறார் தமிழ் அங்க போய் டெலிவரி பண்ண டைம் கேளு என கார்த்தி இடம் சொல்லுகிறார் அந்த சமயத்தில் தொழிலாளிகள் ஓடி வந்து எங்களுக்கு சம்பளம் வந்துருச்சு எதற்காக இப்ப சம்பளம் போட்டீர்கள் எல்லா வேலையும் முடிச்சு கிட்டு அப்புறம் போட்டு இருக்கலாம் இல்ல நாங்க உங்களை விட்டு போயிடுவோம்னு நினைச்சீங்களா என அனைத்து தொழிலாளிகளும் கேட்கிறார்கள்.
தமிழ் நாங்க எங்களோட கடமையை தான செஞ்சோம் நீங்க உழைச்சீங்க அதனால சம்பளம் கொடுக்கிறோம் உங்க அக்கறைக்கும் பாசத்துக்கும் ரொம்ப நன்றி என பேசுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க அடுத்த காட்சியில் ராகினி மற்றும் அர்ஜுனின் அக்கா கோவிலுக்கு வருகிறார்கள் சாமி கும்பிட்டு உட்கார இடம் பார்க்கிறார்கள் அந்த சமயத்தில் கோதை, வசு, சரஸ்வதி மூவரும் கோவிலுக்கு வருகிறார்கள்.
அப்பொழுது ஒரு லேடி உங்களால தான் என் குடும்பம் இன்னைக்கு நல்லா இருக்கு எனக்கு கல்யாணம்னு இருந்தப்போ நகை கம்மியா இருக்குன்னு கேட்டங்க அப்ப அஞ்சு பவுன் செயின் கழட்டி கொடுத்தீங்க உங்களால தான் இன்னைக்கு நான் நல்ல நிலைமைல இருக்கேன் என பேசுகிறார்கள் அப்பொழுது ராகினி அதை பார்த்துக் கொண்டிருக்கிறார் நீங்க அவ்வளவு நகை போட்டுக்கிட்டு மகாலட்சுமி மாதிரி இருப்பீங்க இப்ப ஏன் ஒரே ஒரு செயின் மட்டும் தான் போட்டு இருக்கீங்க உங்க மருமக கழுத்துல ஒண்ணுமே இல்லையே மஞ்சைகயிறு தான இருக்கு என கேள்வி கேட்கிறார் இதனை பார்த்து ராகினி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.