தமிழ் குடியை கெடுக்க முயற்சி செய்து நடுத்தெருவுக்கு வந்த அர்ஜுன்.! இந்த அசிங்கம் தேவையா மாப்பிள உனக்கு..

thamizhum saraswathiyum november 30
thamizhum saraswathiyum november 30

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேக்னா தமிழன் பிசினஸை கவனிப்பதற்காக சென்னை வந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே அர்ஜுன் தமிழுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மேகனாவிடம் சொல்ல முயற்சி செய்தார் ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தமிழ் நீங்க எப்படி பிசினஸ் பண்ண போகிறீர்கள் என்பதை நான் பார்க்க வேண்டும் என மேகனா கூற அதற்கு என்ன தாராளமாக பார்க்கலாம் என்று கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் சென்னை எனக்கு சுற்றிக்காட்ட வேண்டும் எனவும் பேசுகிறார் அதற்கு வேலையை முடித்துவிட்டு கண்டிப்பாக போகலாம் என கூறுகிறார் தமிழ்.

மற்றொரு காட்சியில் தமிழ் கம்பெனியில் இருக்கும் பொழுது அர்ஜுன் கம்பெனியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் தமிழைப் பார்த்து எங்களுக்கு அங்கு வேலையும் கிடையாது மரியாதையும் கிடையாது நீங்கள் ஒரு குடும்பம் மாதிரி பார்ப்பீர்கள் அதனால் இங்கே நாங்கள் வேலைக்கு சேர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் அதற்கு தமிழ் பரவாயில்லை எத்தனை பேர் வந்தாலும் பரவாயில்லை சேர்த்துக் கொள்ளலாம் என கூறி விடுகிறார்.

இந்த விஷயம் அர்ஜுனுக்கு அர்ஜுனனின் மாமா கூறுகிறார் உடனே அர்ஜுன் கோபப்படுகிறது. எப்படியாவது தமிழ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என முயற்சி செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அர்ஜுனின் அம்மா அவன் கை ஓங்கி கொண்டே போகிறது நாம் கீழே இறங்கி கொண்டே இருக்கிறோம் எப்படியாவது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறுகிறார்.

உடனே அர்ஜுன் மாமா மேகனா சென்னை வந்துள்ளதை  கூற உடனே இருவரும் கிளம்பி மேகனா இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு மேகனாவை சந்திக்க வேண்டும் என வாட்ச்மேன் இடம் கூற அப்பாயின்மென்ட் இருக்கிறதா என கேட்கிறார் மேகனா மேடம் தான் வர சொன்னார் அவரை எனக்கு நன்றாக தெரியும் என கூறி விடுகிறார் வீட்டிற்கு உள்ளே சென்ற அர்ஜுன் மேக்னாவின் அம்மாவை பார்த்து மேக்னாவை பார்க்க வேண்டும் என கூறுகிறார்.

மேகனா வெளியே வந்தவுடன் நீங்களா நீங்களே ஃபிராடு எப்படி பொய் சொல்லிட்டு உள்ள வந்தீங்களா என திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் சொத்தை எழுதி வாங்கினது எல்லாமே எனக்கு தெரியும் என பேசுகிறார் இதனால் இருவரையும் அடித்து வெளியே துரத்த சொல்கிறார் வெளியே வந்த அர்ஜுன் தமிழுக்கு திருமணமானதை  சத்தமாக கூறுகிறார் ஆனால் மேக்னாவிடம் இருந்து ஒரு ரியாக்ஷனும் கிடையாது அந்த சமயத்தில் நமச்சி வந்து அர்ஜுன் மற்றும் அர்ஜுன் மாமாவை கிண்டல் அடிப்பது போல் பேசுகிறார்.

அடுத்த காட்சிகள் நமச்சி கோவிலுக்கு சென்று சாமியை கும்பிடுகிறார் அப்பொழுது நான் செய்தது தவறுதான் ஆனால் தமிழை விட்டால் வேறு யாரையும் எனக்கு தெரியாது தமிழ் நல்லதற்காக தான் இப்படி செய்தேன் என சாமி கும்பிடுகிறார் அதுமட்டுமில்லாமல் மேகனாவே சந்தித்து நமச்சி உண்மையை சொல்ல முயற்சி செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.